search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Credit Assistance"

    • மகளிர்சுய உதவி குழுக்களுக்கு ரூ.2கோடியே47 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வாழ்வா தார இயக்கம் வட்டார மேலாண்மை அலகின் சார்பில் அனைத்து வங்கிகள், ஒருங்கிணைந்த வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, சின்னதுரை, முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் பாண்டி மாதேவி வரவேற்றார். குட்லாடம்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குழுவிற்கு பெருங்கடனாக ரூ.1 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் உள்பட 25 குழுக்களுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் 35 குழுக்கான ரூ.2 கோடியே 25 லட்சத்திற்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு வங்கியின் அனுமதியும் வழங்கப்பட்டது.

    வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் லதா, தனபாக்கியம், செந்தாமரை, பவித்ரா, வட்டார வள பயிற்றுனர் நாச்சம்மாள், குட்லாடம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து

    கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

    • ஆண்கள் குழுக்களுக்கும்15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
    • இரண்டு கறவை மாடு வாங்க தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மக்கள், பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் உதவிகளை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.ஆண்டு வருமானம் 3லட்சம் ரூபாய்க்கு மிகாத 18 முதல் 60 வயது வரையுள்ள நபர்களில், குடும்பத்தில் ஒருவர் மட்டும் பயன்பெறலாம்.

    பொதுகால கடன், தனிநபர் கடன் திட்டத்தில், அதிகபட்சமாக 15 லட்சம் வரையிலும் பெண்கள், 2 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.மகளிர் திட்ட அலுவலரால் தர ஆய்வு செய்த 6 மாதங்களுக்கு மேலாக இயங்கும் மகளிர் குழுக்களுக்கு 15 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.

    இதேபோல்ஆண்கள் குழுக்களுக்கும்15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.குழுவில் அதிகபட்சமாக 20 பேர் வரை இருக்கலாம்.

    இரண்டு கறவை மாடு வாங்க தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பித்தை பெற்றுபூர்த்தி செய்து கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்கலாம்.

    இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 0421 2999130 என்ற எண்களிலும்,dbcwotpr@gmail.comஎன்ற இணையதளத்திலும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×