search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women self Help Group"

    • மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வரு கின்ற வருகிற 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற வுள்ளது.

    இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்ப ரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், விருந்தின ருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு பொருட்க ளான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டி கள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது

    எனவே நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகங்கள் அமைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது
    • விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பினர் இன்று (வியாழக்கிழமைக்குள்) விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    தென்காசி:

    சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் செயல்முறை ஆணையின்படி, தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகங்கள் அமைக்க தெரிவிக்க ப்பட்டுள்ளது. 2023 சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறு தானியம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும் மற்றும் சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்ப டுத்தவும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் சிறுதானிய உணவகம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பினர் இன்று (வியாழக்கிழமைக்குள்) விண்ணப்பித்து பயன்பெறு மாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

    • கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
    • விண்ணப்பங்களை 21-தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

    எனவே தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுய உதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம், நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் வருகிற 10-ந்தேதி முதல் 21-தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, வங்கி கடனும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
    • பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அந்தந்த மாவட்ட சுய உதவிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் திருச்சி நிகழ்ச்சியை அகன்ற திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

    பின்னர் திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய பின்னர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

    இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தலைமை கொறடா கோவி செழியன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கி சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தஞ்சை மாவட்டத்தில் 491 சுய உதவி குழுக்களுக்கு ரூ.21.99 கோடி கடன் உதவி, 280 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.120.96 கோடி மதிப்பிலான வங்கி கடனும் ஆக கூடுதல் ரூ.142.95 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் 771 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர சேகரன், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர்சுய உதவி குழுக்களுக்கு ரூ.2கோடியே47 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வாழ்வா தார இயக்கம் வட்டார மேலாண்மை அலகின் சார்பில் அனைத்து வங்கிகள், ஒருங்கிணைந்த வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, சின்னதுரை, முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் பாண்டி மாதேவி வரவேற்றார். குட்லாடம்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குழுவிற்கு பெருங்கடனாக ரூ.1 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் உள்பட 25 குழுக்களுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் 35 குழுக்கான ரூ.2 கோடியே 25 லட்சத்திற்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு வங்கியின் அனுமதியும் வழங்கப்பட்டது.

    வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் லதா, தனபாக்கியம், செந்தாமரை, பவித்ரா, வட்டார வள பயிற்றுனர் நாச்சம்மாள், குட்லாடம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து

    கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

    மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1ஐ தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 11-னை செயல்படுத்த 201718ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.

    பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

    ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடின தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

    கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 201718ஆம் ஆண்டில் விதி எண் 110ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 135 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (சென்னை தவிர) 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களில் குழாய்கள் பதித்தல் மற்றும் மழையினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பொருட்டு, நடப்பாண்டில் 1,350 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரூராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    ×