தென்காசி மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள்-கலெக்டர் தகவல்

கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை 21-தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
கலெக்டர் துரை ரவிச்சந்திரன்.
கலெக்டர் துரை ரவிச்சந்திரன்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுய உதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம், நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் வருகிற 10-ந்தேதி முதல் 21-தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com