மகளிர்சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

மகளிர்சுய உதவி குழுக்களுக்கு ரூ.2கோடியே47 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.
மகளிர்சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
Published on

வாடிப்பட்டி

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வாழ்வா தார இயக்கம் வட்டார மேலாண்மை அலகின் சார்பில் அனைத்து வங்கிகள், ஒருங்கிணைந்த வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, சின்னதுரை, முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் பாண்டி மாதேவி வரவேற்றார். குட்லாடம்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குழுவிற்கு பெருங்கடனாக ரூ.1 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் உள்பட 25 குழுக்களுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் 35 குழுக்கான ரூ.2 கோடியே 25 லட்சத்திற்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு வங்கியின் அனுமதியும் வழங்கப்பட்டது.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் லதா, தனபாக்கியம், செந்தாமரை, பவித்ரா, வட்டார வள பயிற்றுனர் நாச்சம்மாள், குட்லாடம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து

கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com