என் மலர்
நீங்கள் தேடியது "பணக்காரர்கள்"
- உலகில் பள்ளிக்குச் செல்லாத 26 கோடி குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கி, அவர்களை வறுமையிலிருந்து மீட்க முடியும்.
- 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.5 டிரில்லியன் டாலர்கள்.. இந்திய மதிப்பில் இது பல லட்சம் கோடிகள் ஆகும்.
இதில் பாதியை (1.25 டிரில்லியன் டாலர்களை) தானமாக வழங்கினால் என்ன நடக்கும்?
இந்தத் தொகையைப் பயன்படுத்தி அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகில் ஒருவரைக் கூட பசியால் வாடவிடாமல் உணவு வழங்க முடியும்.
உலகளாவிய ஊட்டச்சத்துக் குறைபாட்டை இதன் மூலம் முழுமையாகத் துடைத்தெறியலாம்.
உலகில் பள்ளிக்குச் செல்லாத 26 கோடி குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கி, அவர்களை வறுமையிலிருந்து மீட்க முடியும். அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகில் தீவிர வறுமையை 1 சதவீதமாக குறைக்க முடியும்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் ஏழை நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர், தடுப்பூசிகள் மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்க முடியும். மலேரியா, காசநோய் போன்ற நோய்களை உலகில் இருந்தே நீக்க இது போதுமான தொகையாகும்.
ஆனால் நிலைமை இதற்கு தலைகீழாக, ஏழை இன்னும் ஏழையாக, பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக ஆகி வருவதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பொருளாதார ஏற்றத்தாழ்வு:
உலக அளவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து Oxfam இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 இல் இருந்து 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.
அறிக்கைப்படி, ஒரு சாதாரண குடிமகனை விட, ஒரு கோடீஸ்வரர் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து உயரும் நிலையில், மறுபுறம் உலகில் உள்ளவர்களில் நான்கு பேரில் ஒருவருக்குச் சரியான உணவு கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பணக்காரர்களுக்குச் சாதகமாக வரிகளைக் குறைத்தது மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது போன்ற செயல்பாடுகள், கோடீஸ்வரர்களின் சொத்து உயர முக்கியக் காரணமாக இருந்ததாக ஆக்ஸ்பாம் சாடியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைதளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில், ஜனநாயகம் சீர்குலைய 7 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அறிக்கை எச்சரிக்கிறது.
இவற்றுக்கு தீர்வாக பணக்காரர்கள் மீது அதிக வரி, அரசியலில் பணத்தின் ஆதிக்கம் குறைப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் வேண்டும் என்று Oxfam அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
- பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்.
- உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.
உலக அளவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து Oxfam இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 இல் இருந்து 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 18.3 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.1,660 லட்சம் கோடி ) என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதாவது, உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.
அறிக்கைப்படி, ஒரு சாதாரண குடிமகனை விட, ஒரு கோடீஸ்வரர் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து உயரும் நிலையில், மறுபுறம் உலகில் உள்ளவர்களில் நான்கு பேரில் ஒருவருக்குச் சரியான உணவு கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பணக்காரர்களுக்குச் சாதகமாக வரிகளைக் குறைத்தது மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது போன்ற செயல்பாடுகள், கோடீஸ்வரர்களின் சொத்து உயர முக்கியக் காரணமாக இருந்ததாக ஆக்ஸ்பாம் சாடியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைதளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில், ஜனநாயகம் சீர்குலைய 7 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அறிக்கை எச்சரிக்கிறது.
இவற்றுக்கு தீர்வாக பணக்காரர்கள் மீது அதிக வரி, அரசியலில் பணத்தின் ஆதிக்கம் குறைப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் வேண்டும் என்று Oxfam அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் இந்தியாவின் இடஒதுக்கீடு முறை அதிகாரத்தை ஜனநாயகப்படுத்தும் ஒரு சிறந்த வழி எனவும் Oxfam தனது அறிக்கையில் பாராட்டி உள்ளது.
- பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 33 சதவீதத்தை குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33முதலீடு செய்கிறார்கள்.
- பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
இந்தியாவில் 30 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் இதில் எல்லாம் அதிகப்படியாக முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து 150 பணக்காரர்களிடம் கோடக் மஹிந்திரா வங்கி ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் தங்களது முதலீடுகளில் 45 சதவீதத்தை கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33% முதலீடு செய்கிறார்கள்.
குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையை விட கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருவமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு ரியல் எஸ்டேட்களிலும் பணக்காரர்கள் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக அளவில் முதலீடு செய்யும் பணக்காரர்களில் 35% பேர் வெளிநாடுகளில் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்கள்.
வெளிநாடுகளுக்கு குடிபெயரும் நோக்கத்தில் பெரும்பாலான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்கிறார்கள். கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பணக்காரர்களில் 5 இல் ஒருவர் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள்.
பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 32 சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள். அதில் 89% தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் 83 சதவீதமும், PMS ஃபண்டுகளில் 55 சதவீதமும், காப்பீடு/ULIPகள் 40 சதவீதமும் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அமெரிக்க பங்குகள், இந்திய முதலீட்டர்களிடையே தற்போது பிரபலமடைந்து வருகிறது.
கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பணக்காரர்கள் தங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு செலவு செய்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.26 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 2.18 லட்சமாக இருந்தது. இது 2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.30 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
- இளைஞர் மிஹிர் ஷாம் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன்
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு ஓட்டிய சொகுசு கார் இடித்து 2 இளம் ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம் பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியது. இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட கணவனும் மனைவியும் காரின் முன்புற பானட் பகுதியில் சிக்கினனர். அவர்கள் மீது மோதியதும் இளைஞர் அங்கிருந்து தப்பிக்க காரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது சமாளித்துக்கொண்டு கணவர் தப்பிக்கவே, மனைவி காவேரி பானட்டில் சிக்கியபடி 100 மீட்டர் தொலைவுக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.
- குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
- அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.
தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.
பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.







