என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார ஏற்றத்தாழ்வு"

    • இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது.
    • ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.

    மனித உடல் என்பது ஒரே மாதிரியான கூறுகளால் ஆனது. ஆனால் மனித உயிரின் மதிப்பு என்பது எந்த காலத்திலும் சமமாக இருந்ததில்லை. சமூகத்தின் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அது இருந்திருக்கிறது.

    நவீன காலத்தில் அரசுகள் மனிதன் வாழ்வதற்கான உரிமையை சமமாக வழங்குவதாக கூறுகின்றன. அனைத்து நாட்டு அரசியலமைப்புகளிலும் அந்த வரி இருக்கிறது.

    உணவு, மருத்துவம் உள்ளிட்ட அதற்கான திட்டங்களும் அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சமூகம் இன்னும் பரபட்சமானதாகவே இருந்து வருகிறது. ஒரு நாட்டுக்குள் இருக்கும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதை தாண்டி நாடுகளுக்கிடையேயான இடைவெளியும் கவனிக்கத்தக்கது.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடிமகனின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்கும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்போரின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்குமே பாரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தால் அது அந்த வாரத்தின் பரபரப்பாக மாறுகிறது.

    ஆனால் சூடானில் கிளர்ச்சியாளர்களால் ஒரே கிராமத்தில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, குறைந்தபட்சம் பேசுபடுவதோ அல்லது உலகளவில் ஆவணமாவதோ கூட கிடையாது.


    இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு பழிவாங்க காசாவில் 70,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் மற்றொரு உதாரணம்.

    இது ஒரு புறம் இருக்க, அதிகாரம் மக்களின் உயிரின் மீது எத்தனை மதிப்பளிக்கிறது என்பதுமே கேள்விக்குரிய ஒன்றே.

    ஒரு விபத்து நிகழ்ந்தால் உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என அறிவிக்கப்டுகிறதே தவிர அதுபோன்ற விபத்து அல்லது தவறுகளை அடுத்து நிகழாமல் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசுகள் தரப்பில் நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ளப்டுகிறதா என்பது பெரிய கேள்விக்குறியே.

    மனித உயிர் விலைமதிப்பற்றது. இருப்பினும் இழப்பீடு என்பது உயிரிழந்தவரின் வெற்றிடத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள குடும்பத்திற்கு தேவை என்பதும் மறுக்க முடியாதது.

    இதன் அடிப்படையில் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்படுகிறது என்பது ஒரு உயிருக்கு அதிகாரம் எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வகையில் அண்மையில் இழப்பீடு குறித்து வந்த 2 செய்திகள் ஒப்புநோக்கத்தக்கவை.

    ஒன்று கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 260 பேருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு.

    ஏர் இந்தியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    எனவே உயிரிழந்த 260 பேருக்கும் தலா ரூ.1கோடி வீதம் இழப்பீடாக மொத்தம் ரூ.260 கோடி வழங்கப்படுகிறது.

    மற்றொரு செய்தி, அமெரிக்காவில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த 23 வயது இந்திய மாணவி ஜான்வி கண்டுலா குடும்பத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணம்.

    கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம், ஜான்வியின் குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி வாகனத்தை சுமார் 119 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே ஜான்வியின் உயிரிழப்புக்கு காரணம்.

    எனவே எந்த தவறும் செய்யாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு பொருத்தமானது என அந்நாட்டு நீதிமன்றம் கருதியது.

    அகமதாபாத் விமான விபத்திலும் பயணிகள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் அவர்களின் உயிருக்கு மதிப்பு ரூ.1 கோடி என்று முடிவுகட்டபடுகிறது. ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.  

    • படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
    • இளைஞர் மிஹிர் ஷாம் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன்

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு  ஓட்டிய சொகுசு கார் இடித்து 2 இளம் ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம் பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியது. இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட கணவனும் மனைவியும் காரின் முன்புற பானட் பகுதியில் சிக்கினனர். அவர்கள் மீது மோதியதும் இளைஞர் அங்கிருந்து தப்பிக்க காரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது சமாளித்துக்கொண்டு கணவர் தப்பிக்கவே, மனைவி காவேரி பானட்டில் சிக்கியபடி 100 மீட்டர் தொலைவுக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

    இதனால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். 

    • குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

    தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது. 

     

    ×