என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    ரியல் எஸ்டேட்டா? ஷேர் மார்க்கெட்டா?.. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்?
    X

    ரியல் எஸ்டேட்டா? ஷேர் மார்க்கெட்டா?.. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்?

    • பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 33 சதவீதத்தை குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33முதலீடு செய்கிறார்கள்.
    • பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    இந்தியாவில் 30 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் இதில் எல்லாம் அதிகப்படியாக முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து 150 பணக்காரர்களிடம் கோடக் மஹிந்திரா வங்கி ஆய்வு செய்துள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் தங்களது முதலீடுகளில் 45 சதவீதத்தை கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33% முதலீடு செய்கிறார்கள்.

    குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையை விட கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருவமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    குறிப்பாக வெளிநாட்டு ரியல் எஸ்டேட்களிலும் பணக்காரர்கள் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக அளவில் முதலீடு செய்யும் பணக்காரர்களில் 35% பேர் வெளிநாடுகளில் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்கள்.

    வெளிநாடுகளுக்கு குடிபெயரும் நோக்கத்தில் பெரும்பாலான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்கிறார்கள். கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பணக்காரர்களில் 5 இல் ஒருவர் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள்.

    பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 32 சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள். அதில் 89% தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் 83 சதவீதமும், PMS ஃபண்டுகளில் 55 சதவீதமும், காப்பீடு/ULIPகள் 40 சதவீதமும் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அமெரிக்க பங்குகள், இந்திய முதலீட்டர்களிடையே தற்போது பிரபலமடைந்து வருகிறது.

    கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பணக்காரர்கள் தங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு செலவு செய்கிறார்கள்.

    2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.26 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 2.18 லட்சமாக இருந்தது. இது 2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.30 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×