search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "decrease"

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 83.09 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. குடிநீ ருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.99 அடியாக உள்ளது. இதே போல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து 17 நாட்களாக இருந்து வருகிறது.

    இது ஒரு புறம் இருக்க பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 30 அடியாக இருக்கும் பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 3.51 அடியாக குறைந்து உள்ளது.

    • தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
    • எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.

    தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.

    தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

    2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.
    • மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் நெல்லையிலும் தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

    அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 50-ஐ நெருங்கியது. தொடந்து தினமும் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 100-ஐ கடந்தது.

    இதைத்தொடர்ந்து தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிரிமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.

    இதனால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. 10-ந் தேதி 90-க்கு அதிகமாக இருந்த பாதிப்பு நேற்று முன்தினம் 68 ஆகவும் நேற்று 39 ஆகவும் இருந்தது. இன்று தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து இன்றைய பாதிப்பு 36 ஆக உள்ளது.

    இதில் அதிகபட்சமாக மாநகராட்சி பகுதியில் 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல் மாவட்டத்தில் அம்பை, பாளை, சேரன்மகாதேவி, மானூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதியிலும் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    • நண்டு விலை குறைந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • மீன் விலை குறைந்த நிலையிலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்போது விலை அதிகரித்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு, பெரியபட்டினம், சேதுக்கரை, வேலாயுதபுரம், மாயாகுளம், கீழக்கரை உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில்ஏராளமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    சில தினங்களாக மீன்பாடு இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது அதிக அளவு மீன் வரத்து உள்ளது. வாடைக் காற்று வீசியதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், சமீபத்தில் பெய்த மழை யாலும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் கிடைத்து வருகிறது.

    இதனால் மொத்த வியா பாரிகள் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். மீன் விலை குறைந்த நிலையிலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்போது விலை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நண்டு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.300 வரை விற்கப்படுவதால் நண்டு பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 5 மாதங்கள் நண்டுக்கு அதிகமான கிராக்கி இருந்தது. இத னால் கிலோ ரூ.800 வரை மொத்த விற்பனையாளர்கள் வாங்கி சென்றனர். தற்போது பல்வேறு பகுதிகளிலும் நண்டு பாடு அதிகம் இருப்ப தால் மொத்த வியாபாரிகள் ரூ.250 முதல் 300 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சில மீனவர்கள் மொத்த வியாபாரிகள் எடுக்கும் விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டிற்கு தற்போது நண்டு வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.24,114-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்தது. 24-ந் தேதி பவுன் ரூ.24 ஆயிரத்து 656-க்கு விற்றது. அதையடுத்து விலை படிப்படியாக குறைந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24 ஆயிரத்து 392 ஆக இருந்தது. இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு மேலும் ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 144 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,018-க்கு விற்கிறது.

    பங்கு சந்தை மீதான முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தை நிலவரம் போன்றவை காரணமாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும் ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.25,488-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.

    இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 25 ஆயிரத்து 488 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 3,186-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ. 43 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ. 43.50 ஆகவும் உள்ளது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.25,264-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.192 சரிந்தது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.24 குறைந்தது.

    இன்று காலை தங்கம் விலை கிராம் ரூ.3158-க்கும், பவுன் ரூ.25,264க்கும் விற்பனையாது.

    வெள்ளி விலை கிராம் ரூ.43,20 ஆகவும், 1 கிலோ ரூ.43, 200 ஆகவும் இருந்தது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,704-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. கடந்த 11-ந்தேதி ஒருபவுன் ரூ.24 ஆயிரத்து 192 ஆக இருந்தது.

    பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 944-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு 56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 888 ஆக இருந்தது.

    இன்று அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 704 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,963-க்கு விற்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது திருமண சீசன் இல்லாததால் தங்கம் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.39.80-க்கு விற்கிறது.
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,164 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,029 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 13-ந் தேதி 101.25 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 99.2 அடியாக இருந்தது. இன்று மேலும் சரிந்து 98.37 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதமாக தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,866 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,513 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 100.74 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 100 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது. #KoyambeduMarket
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது.

    சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாயாக குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது.

    கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட பச்சைப்பட்டானி தற்போது ரூ.35-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் சின்ன வெங்காயம், காலிபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் மிகவும் குறைந்து உள்ளன.

    தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிக அளவில் உள்ளதால் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-

    தக்காளி - ரூ.13
    பெ.வெங்காயம் -ரூ. 10
    சி.வெங்காயம் - ரூ.40
    கத்திரிக்காய்-ரூ.15
    வெண்டை- ரூ.15
    பச்சை பட்டாணி-ரூ.35
    கேரட்-ரூ.8
    பீன்ஸ்-ரூ.30
    முள்ளங்கி-ரூ.8
    முட்டைகோஸ்-ரூ.8
    கொத்தவரை- ரூ.15
    இஞ்சி- ரூ.55
    ப.மிளகாய்- ரூ.20
    காலி பிளவர்- ரூ.10
    உருளை- ரூ.25

    காய்கறி விலை குறைந்தது பற்றி கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வழக்கமாக பச்சை காய்கறிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 75 முதல் 80 லாரி லோடுகளில் விற்பனைக்குவரும். விளைச்சல் அதிகம் மற்றும் சீசன் காரணமாக தற்போது 100 முதல் 120 லோடுகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இதனால் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல் வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 50 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது. வரும் நாட்களில் காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 5ஆயிரத்து 783 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4ஆயிரத்து 406 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 13ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.76 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    ×