search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது. #KoyambeduMarket
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது.

    சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாயாக குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது.

    கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட பச்சைப்பட்டானி தற்போது ரூ.35-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் சின்ன வெங்காயம், காலிபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் மிகவும் குறைந்து உள்ளன.

    தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிக அளவில் உள்ளதால் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-

    தக்காளி - ரூ.13
    பெ.வெங்காயம் -ரூ. 10
    சி.வெங்காயம் - ரூ.40
    கத்திரிக்காய்-ரூ.15
    வெண்டை- ரூ.15
    பச்சை பட்டாணி-ரூ.35
    கேரட்-ரூ.8
    பீன்ஸ்-ரூ.30
    முள்ளங்கி-ரூ.8
    முட்டைகோஸ்-ரூ.8
    கொத்தவரை- ரூ.15
    இஞ்சி- ரூ.55
    ப.மிளகாய்- ரூ.20
    காலி பிளவர்- ரூ.10
    உருளை- ரூ.25

    காய்கறி விலை குறைந்தது பற்றி கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வழக்கமாக பச்சை காய்கறிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 75 முதல் 80 லாரி லோடுகளில் விற்பனைக்குவரும். விளைச்சல் அதிகம் மற்றும் சீசன் காரணமாக தற்போது 100 முதல் 120 லோடுகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இதனால் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல் வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 50 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது. வரும் நாட்களில் காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
    Next Story
    ×