search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு
    X

    நெல்லை மாவட்டத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.
    • மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் நெல்லையிலும் தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

    அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 50-ஐ நெருங்கியது. தொடந்து தினமும் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 100-ஐ கடந்தது.

    இதைத்தொடர்ந்து தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிரிமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.

    இதனால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. 10-ந் தேதி 90-க்கு அதிகமாக இருந்த பாதிப்பு நேற்று முன்தினம் 68 ஆகவும் நேற்று 39 ஆகவும் இருந்தது. இன்று தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து இன்றைய பாதிப்பு 36 ஆக உள்ளது.

    இதில் அதிகபட்சமாக மாநகராட்சி பகுதியில் 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல் மாவட்டத்தில் அம்பை, பாளை, சேரன்மகாதேவி, மானூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதியிலும் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    Next Story
    ×