என் மலர்
உலகம்

சீன அதிபரா? ரஷிய அதிபரா? இருவரில் யாரை சமாளிப்பது மிகவும் கடினம்? - டிரம்ப் சொன்ன பதில்
- நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது.
- வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இருவரில் யாரை சமாளிப்பது மிகவும் கடினம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர்கள் இருவரும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர்கள், அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. நீங்கள் அவர்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது." என்று தெரிவித்தார்.
அதே நேர்காணலில், எட்டு போர்களை நிறுத்த முடிந்ததாக கூறிய டிரம்ப், உக்ரைன் போரை தன்னால் மட்டும் நிறுத்த முடியவில்லை, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.
தனக்கு புதினுடன் நல்ல உறவு உள்ளது என்றும் அதனால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது மிகவும் எளிதானது என்று நினைத்தது தவறு என்று டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடந்த திட்டமிட்டுள்ளது குறித்து பேசிய டிரம்ப், ரஷிய சோதனைகளை நடத்துவதாக அறிவித்துள்ளது, வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
பாகிஸ்தானும் சோதனை செய்கிறது. சோதனை செய்யாத ஒரே நாடு நாங்கள்தான். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
பேட்டியில், சீனா, ரஷியா ஆகியவை அணு ஆயுதத்தை சோதனை செய்யவில்லை என்றும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் டிரோன் உள்ளிட்ட உபகரணங்களை தான் சோதனை செய்வதாக நிருபர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், அவை ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்கின்றன அவை வெளியே கூறப்படுவதில்லை என தெரிவித்தார்.






