தாய்லாந்து ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
தாய்லாந்து ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
Published on

பாங்காங்:

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.

அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.

இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.

இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com