என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cambodia"

    • தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.
    • தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம்.

    தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக திடீர் மோதல் வெடித்தது. இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் தொலை பேசியில்நீண்ட நேரம் பேசினார்.

    இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சவார்த்தையில் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயா அந்நாட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார்.

    கம்போடியா பிரதமர் ஹூன் மானெட் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

    இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூக உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகள் இடையே அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி, எல்லை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இடையில் நீடித்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

    மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நினைவூட்டுகிறது
    • இந்த மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஐ எட்டியுள்ளது.

    பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தனது மத்தியஸ்தத்தால் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியிருப்பது தெரிந்ததே.

    சமீபத்தில், அவர் மீண்டும் அமைதியின் தூதராக மாறியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்தார். உடனடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

    இரு நாடுகளின் தலைவர்களிடமும் தனித்தனியாக பேசியதாகக் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார்.

    மோதல்கள் இப்படியே தொடர்ந்தால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் ஆபத்தில் இருக்கும் என்று இருவரையும் எச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.

    இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறிய அவர், அவர்கள் உடன்பாட்டிற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக கூறினார்.

    "இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தம் மற்றும் அமைதியை நாடுகின்றனர். அவர்களுக்கு நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரம் உள்ளது. வரும் ஆண்டுகளில் அவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நம்புகிறேன். ஒரு சிக்கலான சூழ்நிலையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன். இந்த போரில் பலர் கொல்லப்படுகிறார்கள், இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நினைவூட்டுகிறது" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல்கள் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டின. இந்த மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஐ எட்டியுள்ளது. 130,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

    • பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுகிறது.
    • எல்லைப் பகுதிகளில் இருந்து 138,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

    கம்போடியாவில் நடந்த மோதல்களில் எட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில், 15 பேர் இறந்துள்ளனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் இருந்து 138,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து நாட்டின் எல்லையில் உள்ள சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட காரணமாகும்.

    இந்நிலையில் அண்மையில், எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதனால் தாய்லாந்து கம்போடியா மீது போர் விமானங்கள், பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. கம்போடியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் குறித்து ஐநா கவலை தெரிவித்தது. இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு கூட்டமும் நடைபெற்றது.

    இந்நிலையில் கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை விரும்புவதாகவும், நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைக்கு அமைதியான தீர்வைக் காண முயற்சிப்பதாகவும் கம்போடியா தெரிவித்துள்ளது. 

    • தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
    • தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

    தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றன.

    இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.

    தாய்லாந்து சுகாதார அமைச்சகம், ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

    எல்லையோர கிராமங்களில் இருந்து 4,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரு தரப்பினரையும் அதிகபட்ச நிதானத்துடன் செயல்படவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளும் மோதலுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றன.

    இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரகாலக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள்  இருந்து வருகிறது.  இதற்கிடையே தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் மற்றும் கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பான அரசியல் சர்ச்சையும் இந்த மோதலுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

    • இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது.
    • கம்போடியா இன்று ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது.

    தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாய்லாந்து மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த தாய்லாந்து F-16 போர் விமானங்கள் மூலம் கம்போடியா ராணுவத்தை குறிவைத்து குண்டுமழை பொழிந்தது.

    தாய்லாந்து, கம்போடியா நாட்டின் எல்லைகள் லாவோஸ் நாட்டின் எல்லையுடன் பிணைந்துள்ளது. இந்த பகுதிக்கு எமரால்டு முக்கோணம் என்று பெயர். இந்த இடத்தில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளது. இந்த எல்லை தொடர்பாக பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது. 15 வருடத்திற்கு முன்னதாக பயங்கரமான ராணுவ மோதல் ஏற்பட்டது, கடந்த மே மாதம் துப்பாக்கிச்சூட்டில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார்.

    இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாய்லாந்து F-16 போர் விமானம் மூலம் குண்டு மழை பொழிந்தது.

    உபோன் ரட்சதானி மாகாணத்தில் 6 போர் விமானங்கள் குவிக்கப்பட்டு கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குல் நடத்தியது.

    • தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
    • சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

    நாம்பென்:

    கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் வளாகம், இந்து மற்றும் புத்தமத வழிபாட்டு தலம் ஆகும்.

    அந்த கோவிலை உள்ளடக்கிய அங்கோர் பகுதியின் 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. தெற்கு ஆசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக அது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு 10 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கம்போடியாவில் 9-ம் ஆம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த மன்னர்களின் தலைநகரங்களின் சிதிலமடைந்த பகுதிகளை தோண்டி எடுக்க அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் சிதறிக்கிடக்கும் கலைப்பொருட்களை சேகரித்து, கம்போடியாவின் கலாசார பெருமையை பறைசாற்றுவதும் அகழ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.

    அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அதை 'ஸ்கேன்' செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்துகிறது.

    தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இதனால் தொல்லியல் அறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்த சிலை, 12 அல்லது 13-வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சிலையின் அங்கமாக கருதப்படும் 29 துண்டுகளுடன் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. 1.16 மீட்டர் உயரம் கொண்ட அச்சிலை, பேயோன் கலை வடிவத்தில் இருக்கிறது.

    இதுகுறித்து தொல்லியல்துறை அறிஞர் நேத் சைமன் கூறியதாவது:-

    இதுவரை கிடைத்தவை எல்லாம் சிறு துண்டுகள். இப்போது சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

    இன்னும் கிடைக்கவில்லை. கலாசார மந்திரியிடம் ஒப்புதல் பெற்று, தலையையும், உடற்பகுதியையும் பொருத்தி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
    • வெடி விபத்து குறித்த தகவலை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் பகிர்ந்துள்ளார்.

    கம்போடியா நாட்டின் மேற்கு பகுதி, கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது.

    அங்கு, வெடி பெருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில், அங்கு கரும் புகை மண்டலமாக உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    • 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் =ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஏ ரவிசங்கர் கூறுகையில், இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.

    காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். நேற்று சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் 'கிளர்ச்சி' செய்தனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னதாக சிங்கப்பூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்துவதாக மே 18 அன்று, விசாகப்பட்டினம் காவல் துறையினர் சுக்கா ராஜேஷ், எஸ் கொண்டலா ராவ் மற்றும் எம் ஞானேஷ்வர் ராவ் ஆகியோரை மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

    கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரும் 27 முதல் 30-ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #Sushma #Vietnamvisit #Cambodiavisit
    புதுடெல்லி:

    ஆசியான் அமைப்பில் உள்ள நேசநாடான வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வரும் 27-ம் தேதி வியட்நாம் நாட்டுக்கு பயணமாகிறார்.

    இந்த பயணத்தின்போது,  இருநாட்கள்  வியட்நாமில் தங்கியிருக்கும் சுஷ்மா, இந்திய பெருங்கடல்சார்ந்த மாநாட்டின் மூன்றாவது அமர்வை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் பிரதமர்  நுகுயென் க்சுவான் ஃபுக்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அங்கிருந்து 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராக் சோக்ஹான், கம்போடியா பிரதமர் ஹூன் சென் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சேய் சும் ஆகியோரை சந்தித்து இந்தியா - கம்போடியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Sushma #Vietnamvisit  #Cambodiavisit
    கம்போடியாவில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். #Combodia #PrinceRanariddh
    நோம்பென்:

    கம்போடியா நாட்டில் அடுத்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார். இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா(வயது 39) இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.



    அப்போது எதிரே வந்த வாடகை கார் அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மணி நேரத்துக்கு பின்பு அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போடியாவில் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Combodia #PrinceRanariddh  #Tamilnews
    ×