என் மலர்

  நீங்கள் தேடியது "IT Raid"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 120 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 23-ந் தேதி ஆம்பூர் வந்தனர்.
  • சின்னவரிகம், மோட்டுக்கொல்லை, தார்வழி, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது.

  ஆம்பூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள், தோல் சுத்திகரிப்பு நிலையம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.

  இந்த தொழிற்சாலைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பரிதா குழுமத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பரிதா குழுமம் வருமானத்தை சரியாக கணக்கு காட்டாமல் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும், ஜிஎஸ்டியை முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இதனைத்தொடர்ந்து, வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 120 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 23-ந் தேதி ஆம்பூர் வந்தனர்.

  ஆம்பூர் மோட்டுக் கொல்லை, அம்பேத்கர் நகர், சின்னவரிகம், கிருஷ்ணாபுரம், துத்திப்பட்டு, தார்வழி உள்ளிட்ட 12 இடங்களில் இயங்கி வரும் பரிதா குழுமம் தோல் தொழிற்சாலைகளில் சோதனை நடத்த தொடங்கினர்.

  23-ம் தேதி காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. சோதனை நடைபெற்ற தோல் தொழிற்சாலைகள் முன்பாக ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

  வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தோல் பொருட்களின் விவரம் தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட எந்திரம் மற்றும் உதிரிபாகங்கள் குறித்த விவரம், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.

  மேலும் தொழிற்சாலை நிர்வாகப்பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகளிடம் வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தனித்தனியாக விசாரணை நடத்தினார். 4-வது நாள் சோதனை நேற்று காலை தொடங்கியது.

  சின்னவரிகம், மோட்டுக்கொல்லை, தார்வழி, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த சோதனை முடிவுக்கு வந்தது. அதில், 6 தொழிற்சாலைகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், கணினி ஹார்ட்டிஸ்க்குகள், பென்டிரைவ் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் எடுத்துச்சென்றனர்.

  இரவு 7 மணியளவில் கிருஷ்ணாபுரம், துத்திப்பட்டு, கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் நடந்து வந்த சோதனையும் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஆம்பூர் பரிதா குழுமத்தில் 12 இடங்களில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த சோதனை நேற்றிரவு 7.15 மணியுடன் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  ஆம்பூரில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலையில் நேற்று மாலை சோதனை முடிந்து முக்கிய ஆவணங்களை 3 வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் எடுத்துச்சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பரிதா குரூப்பில் உள்ள தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனியில் ஆண்டுக்கு ரூ.1600 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது.
  • ஆம்பூர் பரிதா குழும நிறுவனங்களில் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தனர்.

  ஆம்பூர்:

  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன‌.

  இந்த குழுமம் ஷூ பெல்ட் பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

  சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என பரிதா குழும தொழிற்சாலைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு அலுவலகம் தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

  இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன.

  இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 3-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது.

  பரிதா குரூப்பில் உள்ள தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனியில் ஆண்டுக்கு ரூ.1600 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது.

  கடந்த 2 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்திய விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஆம்பூர் பரிதா குழும நிறுவனங்களில் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தனர்.

  அலுவலகத்தில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி நிர்வாக மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதே போன்று இந்தியா ஷூ, ஆற்காடு ஷூ, அஷ்டான் ஷூ, கம்பெனியில் ஜாப் ஒர்க் என்கிற பெயரில் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தனியார் ஷூ கம்பெனியில் ஜாப் ஒர்க் செய்து வந்த பரிதா குழுமத்தின் கணக்கு மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இன்று 3-வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் தொழிற்சாலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன.
  • ஆம்பூரில் இன்று காலை கூடுதலாக 10 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

  வேலூர்:

  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன‌. இந்த குழுமம் ஷூ பெல்ட், பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

  இந்த நிறுவனம் வருவாயை முறையாக கணக்கில் காட்டவில்லை என்ற புகார் எழுந்தது.

  இதைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை தொடங்கினர். சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

  இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் வந்தது.

  இதையடுத்து இது தொடர்புடைய கடைகள் தொழிற்சாலைகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  இரவிலும் நீடித்து விடிய விடிய சோதனை நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

  இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

  ஆம்பூரில் இன்று காலை கூடுதலாக 10 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 குழுமங்களில் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.

  சோதனை நடந்து வரும் தோல் தொழிற்சாலைகள் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இதனால் ஆம்பூர் உள்பட சோதனை நடந்து வரும் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • கணக்கில் வராத நகைகள், தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

  புதுடெல்லி :

  குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சந்தேகித்தது.

  இதையடுத்து சமீபத்தில் இந்த தொழில் குழுமத்துக்கு சொந்தமாக கெடா, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 38 இடங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர். இந்த சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த தகவல், சி.பி.டி.டீ. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

  இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி, ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக சிக்கி உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

  வருமான வரிசோதனையின்போது சிக்கிய தரவுகள், தொழில் குழும நிறுவனங்களின் நிறுவனர்களின் சொந்த பயன்பாட்டுக்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 நாள் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளன.
  • வருமான வரி அதிகாரிகளின் இடைவிடாத சோதனை, 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

  அவனியாபுரம்:

  மதுரையில் அவனியாபுரம், கோச்சடை, ஊமச்சிகுளம் உள்பட 10 இடங்களில் கிளாட்வே சிட்டி, அன்னை பாரத், ஜெயபாரத், கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதன் அடிப்படையில் மண்டல புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி செந்தில்வேலன் அடங்கிய 50 பேர் குழுவினர், கடந்த 20-ந்தேதி காலை 7 மணி அளவில் மேற்கண்ட 10 இடங்களிலும் அதிரடி சோதனையை தொடங்கினார்கள். அப்போது அந்த நிறுவன பங்குதாரர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காண்ட்ராக்டர் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தினர். இதன் விளைவாக அங்கு கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் தெரியவந்தது.

  இது தொடர்பாக கட்டுமான நிறுவன பங்குதாரர்களிடம் இன்று அதிகாலை வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே மேற்கண்ட 10 இடங்களிலும் கைப்பற்றப்பட்டு உள்ள ஆவணங்கள், 2 ஹார்ட் டிஸ்க்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. இன்னொருபுறம் தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப்பணியில் ஈடுபடுவதற்காக சென்னையில் இருந்து மதிப்பீட்டுக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

  மதுரை கட்டுமான நிறுவன பங்குதாரர்களுக்கு சொந்தமான 12 வாகனங்களின் ஆவணங்கள், வருமான வரி தாக்கல் செய்த கணக்குகளுடன் ஒப்பு நோக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

  மதுரையில் 2-வது நாளாக நடந்த சோதனையில் கட்டுமான பங்குதாரர் முருகன், ஜெயக்குமார் ஆகியோர் வீட்டில் தற்போது வரை கணக்கில் காட்டப்படாத ரூ.72 கோடி ரொக்கப் பணம், சுமார் 20 கிலோ தங்கம்-வைர, நகைகள் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  இதற்கிடையே மதுரை கட்டுமான நிறுவன பங்குதாரர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இன்று அதிகாலை 2 கார்களில் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

  2 நாள் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகளின் இடைவிடாத சோதனை, 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

  இந்த சோதனையின் போது மதுரை அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டியின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான முருகன் என்பவரின் வீட்டில் இருந்து பலகோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியார் கட்டுமான நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
  • வருமான வரி சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.

  திண்டுக்கல்:

  மதுரை கோச்சடை விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள் மற்றும் சரவணப்பெருமாள். இவர்களுக்கு சொந்தமான ஆர்.ஆர். இன்ப்ரோ கட்டுமான நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி சாலையில் இவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

  இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் இவர்கள் வரி ஏய்ப்பு செய்தாகவும் புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாளாக நத்தம் அருகில் உள்ள ஆர்.ஆர். இன்ப்ரோ கண்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  இன்று 3-வது நாளாக வருமானவரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.

  இதேபோல ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சின்னகரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள இந்நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் அலுவலகங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் சரவண பெருமாளுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.
  • வருமான வரித்துறை சோதனையால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  செந்துறை:

  மதுரை கோச்சடை விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள் மற்றும் சரவணப் பெருமாள். இவர்களுக்கு சொந்தமான ஆர்.ஆர். இன்ப்ரோ கட்டுமான நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி சாலையில் இவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

  நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது. அதன் பின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

  இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு சொந்தமான கிளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

  இதன் மீது விசாரணை நடத்த இருப்பதால் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் சரவண பெருமாளுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரி கடந்த ஓராண்டாக செயல்படாமல் உள்ளது. இந்த குவாரியில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி அம்பேத்கார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த பதிவேடு உள்பட அனைத்து ஆவணங்களையும் சோதனையிட்டனர்.

  8 மணி நேரம் நடந்த இந்த சோதனையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று கைப்பற்றப்பட்டு ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால் தேனியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  அதன்படி தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது.
  • சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

  கோவை:

  கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.

  கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

  கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கு வருமானவரித்துறை சோதனை நடந்தது.

  நேற்று 3-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. கே.சி.பி. நிறுவனத்தில் 3-வது நாளாக நேற்று காலை தொடங்கிய சோதனையானது விடிய, விடிய நடந்தது. அப்போது அங்கிருந்த பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பிய அவரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

  இந்த நிலையில் இன்று 4-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி. நிறுவனம் மற்றும் கொடிசியா அருகே உள்ள சந்திபிரகாஷ் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கே.சி.பி. நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

  கோவை:

  கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.

  நேற்று சந்திரசேகர் வீட்டிற்கு 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அவது வீட்டின் கதவை பூட்டி விட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது வீட்டில் சந்திரசேகர் இல்லை. அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரிடம் வருமானம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களையும் கைப்பற்றினர்.

  இதேபோல் அவரது பெற்றோர், சகோதரர், சகோதரி வீடு உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது.

  மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனையானது 12 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு முடிந்தது. அதன்பிறகு அதிகாரிகள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் சில ஆவணங்களுடன் கூடிய பைகளும் எடுத்து சென்றனர்.

  கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளத்தில் என்ஜினீயர் சந்திரசேகருக்கு தொடர்புடைய கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  இந்த நிறுவனத்தின் இயக்குனராக கார்த்திக் ஹரிஹரன் இருக்கிறார். சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த அதே நேரத்தில் இங்கும் சோதனை நடந்தது.

  இங்கு 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மற்ற இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை முடிந்தாலும், இங்கு மட்டும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய அந்த அலுவலகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.

  தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை முதல் மீண்டும் கே.சி.பி. நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் கோவையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகராட்சியை சேர்ந்த பொறியாளர் உள்பட 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது.
  • தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  கோவை:

  கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் செயலாளராக இருப்பவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

  என்ஜினீயர் சந்திரசேகரின் வீடு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் வந்தனர்.

  அவர் வீட்டில் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை முன்னிட்டு என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

  ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது.

  தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  என்ஜினீயர் சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபலமான ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரி சோதனை 3 நாட்கள் வரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே அமைந்துள்ள எம்.ஜி.எம் நட்சத்திர சொகுசு விடுதியில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சென்னை:

  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஜி.எம். குழுமம் ஓட்டல், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம். தீம்பார்க் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இதை தவிர கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட் ஒன்றும் உள்ளது. சென்னை மட்டுமின்றி நெல்லை, திண்டிவனம், காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில் எம்.ஜி.எம். குழுமம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்கிற புகார் வருமான வரித்துறைக்கு சென்றது.

  இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் எம்.ஜி.எம். குழும நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டனர். இதன்படி 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று எம்.ஜி.எம். குழும அலுவலகங்களில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

  சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள எம்.ஜி.எம். சென்டர் என்ற பெயரிலான தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஓட்டல் மற்றும் ரிசார்ட் மற்றும் தீம்பார்க் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

  இது தவிர நெல்லை, பெங்களூர் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் யாரையும் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதே போன்று சோதனை நடைபெறும் இடங்களில் இருந்து யாரையும் வெளியில் அனுமதிக்கவில்லை.

  40 இடங்களிலும் எம்.ஜி.எம். நிறுவனங்களின் வரவு, செலவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று மாலை வரையில் சோதனை நடைபெறும் என்றும் அதன் பிறகு வருமான வரி சோதனை தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபலமான ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரி சோதனை 3 நாட்கள் வரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே அமைந்துள்ள எம்.ஜி.எம் நட்சத்திர சொகுசு விடுதியில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அப்போது ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பாக அங்குள்ள ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo