என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகரவிளக்கு பூஜை"

    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
    • மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தபடி உள்ளனர். மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது.

    இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் சபரிமலையில் நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.

    திருவாபரண ஊர்வலம் நேற்று இரவு ஆயரூர் புதியகாவு தேவி கோவிலில் தங்கியது. பின்னர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டது. திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை அதற்காக விரதமிருந்த பக்தர்கள் தூக்கி வந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணத்தை வரவேற்று வழிபட்டனர்.

    திருவாபரண ஊர்வலம் இன்று இரவு தேதிலாகா வனத்துறை சத்திரத்தில் தங்குகிறது. பின்பு நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவிலிக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து புறப்பட்டு, சன்னிதானத்திற்கு மாலை 6 மணியளவில் திருவாபரணங்கள் வந்து சேரும்.

    மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாலை 6:30 மணியளவில் திருவாபரணங்கள் சன்னிதானத்தை வந்தடைகிறது. அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மகரஜோதி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே பல இடங்களில் குடில் அமைத்து தங்க தொடங்கினர். பெரியானை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விரிகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருக்கின்றனர்.

    அது மட்டுமின்றி பம்பை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் டெண்ட் அமைத்து தங்கி வருகின்றனர். இன்று வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி சரிதனத்துக்கு பின் ஆங்காங்கே தங்கியிருக்கின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுகின்றனர்.

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    • கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாடு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி கடந்த 27-ந் தேதியோடு முடிவடைந்தது.

    இந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு 36.33 லட்சம் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு மூலம் இவர்கள் தரிசனம் பெற்றனர். கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.

    மண்டல பூஜை நிறைவை யொட்டி 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. நாளை (31-ந் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நடையை திறப்பார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14-ந் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    இதற்கிடையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போதே சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
    • மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பம்பையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சீசனை முன்னிட்டு நிலக்கல்- பம்பை இடையே தினசரி 200 பஸ்கள் இயக்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனி பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான ஐயப்ப பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
    • சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

    மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

    • மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
    • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    சபரிமலை:

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ம் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    • மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும்.
    • 19-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புகழ் பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறும். மேலும் 19-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதில் 8-ந் தேதி வரை தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அன்றைய நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது.

    சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகிறார்கள். இவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இதனை தவிர்க்கும்படி அய்யப்ப பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது.
    • 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.

    இந்த விழாவில் பங்கேற்க தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இவர்களின் கூட்டத்தால் சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நடைபந்தல் அருகே உள்ள கலையரங்கில் சிறுமிகளின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது.

    திருவாதிரை ராகங்கள் மற்றும் குறத்தி பாட்டு உள்ளிட்ட பாடல்களுக்கு சிறுமிகள் நடனம் ஆடினர்.

    புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் சிறுமிகளின் நடனத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.

    சபரிமலையில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அதன்பிறகு 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அதுவரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந்தேதி நடக்கிறது.
    • 20-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.

    இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் 12-ந்தேதி பந்தளம் ராஜ பிரதிநிதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும்.

    இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகரவிளக்கு பூஜையையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 20-ந்தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 12-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
    • திருவாபரண ஊர்வலத்தின் போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    கேரள மாநிலம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யா.எஸ் அய்யர் தலைமை தாங்கினார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதுகர் மகாஜன், உதவி கலெக்டர் கோபகுமார், ராஜ குடும்ப பிரதிநிதி திருக்கேட்ட நாள் ராஜராஜ வர்மா, பந்தளம் கொட்டாரம் நிர்வாக குழு தலைவர் சசிகுமார வர்மா, செயலாளர் நாராயண வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகர விளக்கையொட்டி பந்தளத்தில் இருந்து 12-ந் தேதி திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருவாபரண ஊர்வலத்தின் போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுடன் மருத்துவ குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடன் செல்வார்கள். ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 19-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம்.
    • 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்கான விழா நடந்து வருகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகர ஜோதி தரிசன தினத்தன்று கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்த முன்பதிவு முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் 14-ந் தேதிக்கு மேல் தான் இனி கோவிலுக்கு செல்ல முடியும்.

    அதே நேரம் சபரிமலை செல்லும் பக்தர்கள் மகரஜோதி அன்று பொன்னம்பல மேட்டிலும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    மகர ஜோதி தரிசனம் முடிந்து பின்னர் வருகிற 19-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். 20-ந் தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

    • சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
    • புதன்கிழமை எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி 14 -ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் சன்னிதானத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் அனந்தகோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம் அமைத்து ஓய்வு எடுக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) எருமேலியில் அம்பலப்புழை, ஆலங்காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வாவர் மசூதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×