என் மலர்

  நீங்கள் தேடியது "Ayyappan Temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 22-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
  • முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.

  தொடர்ந்து 22-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

  அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் அருகே வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
  • பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவி லில் 2017-ம் ஆண்டு 2-வது முறையாக கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு வல்லபை அய்யப்பன் கோவிலில் கணபதி ஹோமம் அஷ்டாபிஷேகம் நடந்தது.

  வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன் சங்கரி, முருகன், பெரிய கடுத்த சாமி, சிறிய கடுத்த சாமி, கருப்பாயி அம்மாள், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

  நேற்று பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்தி ருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம்.
  • 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும்.

  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல, மகரவிளக்கு சீசன் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து தேவஸ்தான மந்திரி கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

  நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படும். 17-ந்தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்படும்.

  பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி விலக்கி கொள்ளப்படும்.

  வழக்கம்போல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம். முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் உள்பட 12 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
  • வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தமிழ் மாத பிறப்பின் போது திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

  அதன்படி புரட்டாசி மாதம் வருகிற 18-ந்தேதி பிறப்பதை முன்னிட்டு, சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

  18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

  இந்த முன்பதிவை இது வரை கேரள காவல்துறை செயல்படுத்தி வந்தது. 2010-ம் ஆண்டு முதல் 2011 வரை சபரிமலையில் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த ஏ.டி.ஜி.பி. பி. சந்திரசேகரனால் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கையாள வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செயல்படுத்துகிறது.

  இதற்காக தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் தனியார் நிறுவனத்துடன் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் சுமார் 50 வாரிய ஊழியர்கள் தொழில் நுட்பம் குறித்து பயிற்சியும் பெற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலையில் தங்க மேற்கூரை சீரமைப்பு பணி முடிந்தது.
  • 10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும்.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் கருவறைக்கு மேல் பகுதியில் தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த தங்க மேற்கூரையில் 15 இடங்களில் மழைக்காலங்களில் லேசான நீர் கசிவு காணப்பட்டது. அதனை சீரமைக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. தொடர்ந்து சீரமைப்பு பணி கடந்த 29-ந்தேதி தொடங்கியது.

  திருவாபரணம் கமிஷனர் பைஜூ, தலைமை பொறியாளர் அஜித்குமார் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணியை கண்காணித்தனர். பி.பி. அனந்தன் ஆசாரி தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உள்ளன.

  கேரளாவில் வருகிற 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

  10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். மாத பூஜை காலங்களைப் போலவே நெய் அபிஷேகம், கலச பூஜை, களப பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடக்கிறது.

  கோவிலில் 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் நாளை முதல் 10-ந்தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 8-ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
  • 10-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.

  தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.

  மேலும் 8-ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

  அதே சமயத்தில் நடை திறக்கப்படும் நாள் முதல் 10-ந்தேதி வரை நிலக்கல் மகாதேவர் கோவிலில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்கு பிறகு நடை 10-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறக்கப்படும்.

  இதற்கான ஆன்லைன் முன்பதிவும் நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  • 21-ந்தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  ஆவணி மாத பூஜை மற்றும் மலையாள புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

  மலையாள புத்தாண்டு பிறப்பையொட்டி தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  வருகிற 21-ந் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். திருவோண பண்டிகைக்காக சபரிமலை நடை மீண்டும் செப்டம்பர் 6-ந் தேதி திறக்கப்பட்டு 10-ந் தேதி வரை சிறப்பு பூஜை நடைபெறும்.

  முன்னதாக காலை 7.30 மணிக்கு உஷ பூஜைக்கு பிறகு சபரிமலைக்கான புதிய கீழ்சாந்தி நியமனத்திற்கான குலுக்கல் நடைபெற்றது. அதில் புதிய கீழ்சாந்தியாக வி.என். ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான கமிஷனர் பி.எஸ்.பிரகாஷ், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், உறுப்பினர் மனோஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வருகிற 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
  • கோவில் நடை அடுத்த மாதம் 6-ந்தேதி திறக்கப்படும்.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

  இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

  வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறும். 5 நாட்கள் நடைதிறப்பை முன்னிட்டு பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

  இந்த பூஜைக்கு பிறகு மீண்டும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 6-ந் தேதி திறக்கப்படும். 8-ந் தேதி திருவோண சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று மாலை பூஜைகள் எதுவும் நடைபெறாது.
  • 21-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும்.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஷ்வரன் நம்பூதிரி நடை திறக்கிறார்.

  இன்று மாலை பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை புதிய தந்திரியாக கண்டரரு ராஜிவரரு பொறுப்பேற்பார்.

  அதன்பின்பு ஆவணி மாத 1-ந்தேதியான நாளை நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம் ஆகியவை நடைபெறும். இதன்பின் கோவிலின் கிழக்கு மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜிவரரு தலைமையில் கணபதி ஹோமம் நடைபெறும்.

  இதன்பின்னர் லட்சார்ச்சனையும் நடத்தப்படும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் அஷ்டாபிஷேம், உதயாஸ்தமன பூஜை,களபாபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறும்.

  21-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும்.

  மீண்டும் ஓண பண்டிகை பூஜைகளுக்காக செப்டம்பர் 6-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீண்டும் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படும்.
  • பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

  நடிகர் ஜெயராம், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், தலைமை பொறியாளர் அஜித்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு விபூதி பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

  நிறை புத்தரிசி பூஜைக்காக நெற்கதிர் கட்டுகள் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மேல்சாந்தியிடம் பக்தர்கள் ஒப்படைத்தனர்.

  இன்று வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

  இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சேதம் அடைந்துள்ள தங்க கூரை பராமரிப்பு பணி தொடங்க உள்ளது. இந்த பணிகள் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்கு முன்னதாக முடிக்கப்படும் என தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.

  கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுகிறது.
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை விழா நாளை நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

  நாளை அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுகிறது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

  இவ்விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும்முன்பு பம்மை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். தற்போது பத்தினம்திட்டா பகுதியில் பலத்த மழை பெய்வதால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

  எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை பத்தினம் திட்டா கலெக்டர் திவ்யா எஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4-ம்தேதி 6 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.
  • 4-ந்தேதி இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

  கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை வருகிற 4-ம் தேதி நடக்கிறது.

  இதற்காக சபரிமலை கோவில் நடை நாளை (3-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் 4-ம்தேதி அதிகாலை கோவில் நடை திறந்ததும் ஆறு மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.

  இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக செட்டிகுளங்கரா கோவில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்காக நெற்கதிர்கள் கொண்டுவரப்படும்.

  நிறை புத்தரசி பூஜைக்கு பிறகு 4-ந்தேதி இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

  ×