search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அய்யப்பன்  கோவிலில் மண்டல பூஜை விழா  வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • வருகிற 14-ந் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம் அய்யப்பன் கோவிலை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், ஆண்டு தோறும் மண்டல பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மண்டல பூஜை நாளை மறுநாள் 14-ந் தேதி துவங்குகிறது. அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா 14-ந்தேதி துவங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மகா கணபதி ேஹாமம், நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், பறையெடுப்பு, மகா விஷ்ணு பூஜை, உற்சவ பலிபூஜை, பகவதி சேவை, தாய்பகை மேளம், பள்ளிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    வருகிற 19 -ந் தேதி காலை 8மணிக்கு அய்யப்ப சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு ஆறாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். காலை 11மணிக்கு, சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில், வீரராகவப்பெருமாள் கோவில் குளத்தில் அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து அய்யப்பசுவாமி ரத ஊர்வலம் துவங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம் அய்யப்பன் கோவிலை சென்றடைகிறது.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, 20ந் தேதி துவங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:30 மணிக்கு கோவிலில் அன்னதானம் நடைபெற உள்ளது. மேலும் 15-ந்தேதி முதல், 18-ந் தேதி வரை தினமும், 7 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×