search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை- பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்
    X

    சபரிமலை கோயில் 18 படிக்கு பூஜை(கோப்பு படம்)

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை- பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்

    • மாத பூஜை நாட்களில் மட்டுமே படி பூஜை நடத்தப்படுகிறது.
    • 2037-ம் ஆண்டு வரை படிபூஜைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை அடுத்து சபரிமலைக் செல்வதற்காக தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். முன்னதாக மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

    கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து ஐயப்பனுக்கு பூஜை செய்தார். இந்த நிலையில், சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் நேற்று சன்னிதானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர மாத பூஜை நாட்களில் படி பூஜை நடத்தப் படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த பூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைக்கு 2024-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதே போல் சகஸ்ர கலச பூஜைக்கும் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    நடப்பு சீசனையொட்டி, தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 250 மில்லி அளவுள்ள ஒரு டின் அரவணை விலை ரூ.80 ஆகும். அப்பம் ஒரு பாக்கெட் ரூ.35 விலையில் விற்பனையாகிறது. சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தளராமல் சாமி தரிசனம் செய்தனர். மழையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கூடுதல் வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×