என் மலர்

  வழிபாடு

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான சிறப்பு பூஜை நடைபெறும் நாட்கள்
  X

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான சிறப்பு பூஜை நடைபெறும் நாட்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
  • 2023 ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:-

  மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

  அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது.

  மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

  பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ந் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-ந் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

  அதைத்தொடர்ந்து பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு மார்ச் 26-ந் தேதி நடை திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். ஏப்ரல் 5-ந் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.

  சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 11-ந் தேதி நடை திறக்கப்படும். 15-ந் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.

  வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி அடைக்கப்படும்.

  பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 29-ந் தேதி நடை திறக்கப்படும். 30-ந்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

  ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு 20-ந் தேதி அடைக்கப்படும்.

  ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு 21-ந்தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி அடைக்கப்படும்.

  ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆகஸ்டு 27-ந் தேதி நடை திறக்கப்பட்டு 31-ந் தேதி அடைக்கப்படும்.

  புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22-ந்தேதி அடைக்கப்படும்.

  ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு 22 -ந் தேதி அடைக்கப்படும்.

  சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, நவம்பர் 10 -ந்தேதி நடை திறக்கப்படும். 11-ந்தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும். பின்னர் 2023-ம் ஆண்டுக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ந்தேதி தொடங்கிநடைபெறும்.

  Next Story
  ×