என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sabarimalai"

    • திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பத்மகுமார் 2 முறை ஆஜரானார்.
    • சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்

    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.

    மேலும், குற்றம்சாட்டப்பட்ட முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

    இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்

    • சபரிமலையில் பதினெட்டாம்படி அருகே லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு.
    • வரிசையை பின்பற்றாமல் சில பக்தர்கள் செல்வதால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

    வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பதினெட்டாம் படி அருகே தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரிசையில் நிற்கும் பக்தர்களை தாண்டி சில பக்கதர்கள் செல்வதால் அசாதரண சூழ்நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பதினெட்டாம் படிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பக்தர்களை பாதுகாப்பாக படிகளில் ஏற்றி விடுகிறார்கள். கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான பக்தர்கள் சிறுவர்களுடன் வந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள கே. ஜெயக்குமார் கூறும்போது "பக்தர்கள் வரிசயைாக செல்வதற்கும், தண்ணீர் வழங்குவதற்குள் கூடுதலாக 200 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. 18 படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நிலையான ஏறுவதை உறுதி செய்ய வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய மற்றும் அபாயகரமான வகையில் கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.

    சில பக்தர்கள் வரிசையை பின்பற்றாமல் முன்னால் குதித்து செல்கின்றனர். இங்கே இருக்கிற பெரிய கூட்டத்தைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு. பக்தர்கள் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், யாரும் வரிசையையோ அல்லது வரிசையையோ துண்டிக்காமல் இருக்கவும் நான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடியிருக்கக்கூடாது" என்றார்.

    • சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
    • மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதில் அவர்," சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.

    அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இருப்பினும், கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது, நீர் நிலையங்களில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக, சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
    • 21ஆம் தேதி பக்தர்கள் தரிசத்திற்கான நடை திறந்திருக்கும்.

    புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். 21-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.

    பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குவதற்கு http://sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 20-ஆம் தேதி பம்பை நதிக்கரையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
    • மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பம்பையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சீசனை முன்னிட்டு நிலக்கல்- பம்பை இடையே தினசரி 200 பஸ்கள் இயக்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனி பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான ஐயப்ப பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கேரளா மாநிலம் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர்.
    • பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நான்கு வழிச்சாலையில் இன்று காலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை:

    ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கேரளா மாநி லம் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நான்கு வழிச்சாலையில் இன்று காலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே வந்தபோது ரோட்டோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இடிபாட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
    • சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    12 விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். மண்டல காலத்தில் நடை திறந்த 12- வது நாள் 12 விளக்கு என்று அழைக்கப்படுகிறது.

    இது சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

    இதையொட்டி சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
    • சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

    மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

    • மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும்.
    • 19-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புகழ் பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறும். மேலும் 19-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதில் 8-ந் தேதி வரை தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அன்றைய நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது.

    சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகிறார்கள். இவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இதனை தவிர்க்கும்படி அய்யப்ப பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது.
    • 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.

    இந்த விழாவில் பங்கேற்க தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இவர்களின் கூட்டத்தால் சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நடைபந்தல் அருகே உள்ள கலையரங்கில் சிறுமிகளின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது.

    திருவாதிரை ராகங்கள் மற்றும் குறத்தி பாட்டு உள்ளிட்ட பாடல்களுக்கு சிறுமிகள் நடனம் ஆடினர்.

    புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் சிறுமிகளின் நடனத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.

    சபரிமலையில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அதன்பிறகு 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அதுவரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    ×