என் மலர்
நீங்கள் தேடியது "புதிய அமர்வு"
- மனுதாரர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு.
- சபரிமலை மட்டுமில்லாமல் பிற மதங்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க முடிவு.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பக்தர்களும், அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனு வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. மனுதாரர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை மட்டுமில்லாமல் பிற மதங்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வழக்குகளை ஒருங்கிணைத்து நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் சபரிமலை வழக்கின் இறுதி வாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அயோத்தி வழக்கை விசாரிக்கும் தகுதிவாய்ந்த புதிய அமர்வு குறித்து ஜனவரி 10-ம் தேதி விசாரணை நடத்தி, அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இன்று ஒரு நிமிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றது, எந்த வாதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அயோத்தி வழக்கை தினந்தோறும் விசாரணை நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர் ஹரிநாத் ராம் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AyodhyaCase






