என் மலர்
நீங்கள் தேடியது "சபரிமலை அய்யப்பன்"
- அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
- 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகாலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி டிசம்பர் 27-ந்தேதி வரை நடந்தது.
அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (14-ந்தேதி) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது.பின்பு பிற்பகல் 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலையில் சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.
மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியை அடையும் திருவாபரணங்கள், சன்னிதானத்திற்கு 6.15 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அதனை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, சபரிமலை மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பின்பு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மாலை 6:30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை லட்சக் கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தார்கள்.
பம்பை ஹில் டாப், சன்னிதான திருமுற்றம், மாளிகப்புரம் கோவில், அன்னதான மண்டபம், பாண்டித்தாவளம், டோனர் இல்ல முற்றம், ஓட்டல் வணிக வளாக பின்புற மைதானம், தரிசன வணிக வளாக பகுதிகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பின் பகுதி, தேங்காய் சேகரிக்கும் பகுதி, கற்பூர ஆழியின் சுற்றுப்பகுதி, ஜோதி நகர், வனத்துறை அலுவலக பகுதிகள், நீர்வளத்துறை அலுவலக பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மகரஜோதியை பக்தர்கள் தரிசித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சன்னிதானத்துக்கு திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் காலை 11 மணி முதல் பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனும திக்கப்படவில்லை. முன் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாலையில் அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
- ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
- 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய3மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட்ட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
- செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
- ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.
மகர ஜோதியே ஐயப்பா!
ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.
அந்த ஜோதியின் வடிவமாகவே ஐயப்பன் விளங்குகிறார்.
'காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் வானைப்பிளக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
அதுதான் ஜோதி. சிறிது நேரமே தென்படும்.
இந்த ஜோதி எப்படி ஏற்படுகிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜோதி வழிபாடுதான் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட மும்மூர்த்திகள் சூரியன், சந்திரன்,நெருப்பு ஆகும்.
இறைவனை வேதம் "ஓம்" என்கிற ஒலி வடிவாக வணங்கும்.
அதற்கடுத்தபடி ஒளி வடிவமாக விளங்குகிறது.
இந்த விண்ணின் விளக்குதான் மகரஜோதி.
ஒளியே சிவம் என்பது ராமலிங்க சுவாமிகள் கருத்து. அவர் ஒளி விளக்குக்கே ஆலயம் அமைத்தார்.
திருநாவுக்கரசர் "நமச்சிவாய" மந்திரமே ஒளிமயமானது என்று வருணிக்கிறார்.
அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவதற்காக நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டைக் கடைப்பிடித்தனர்.
இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகத் திகழ்கிறான். வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரமாயிரம் கதிரவன்கள் தோன்றினால் அந்தப் பேரொளியை ஒருவாறு இறைவனுடைய ஒளிக்கு உவமையாகக் கூறலாம்.
உலகிருளை நீக்கும் கதிரவனும், மதியவனும், தாரகைகளும் அப்பரஞ்ஜோதியின் முன்பு மங்குகின்றன. மின்னொளியும், அக்கினியும் அங்கே சுடர் விடுவதில்லை.
"தீயளி பரப்பும் இறைவனே! மாந்தருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நீ வானத்தில் கதிரவனையும் எண்ணற்ற தாரகைகளையும் தோற்றுவித்தாய். நீயே மக்களின ஒளி. எங்கள் அருகில் இருந்து நீ எமக்கு நன்மையும் அன்பும் தருகிறாய்" என்று புகழ்கிறது ரிக்வேதம்.
- சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
- முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.
ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!
ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.
பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,
கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,
தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,
வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,
ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்
திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.
இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.
நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.
முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.
பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.
தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.
ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.
அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.
நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.
ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.
ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.
ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.
"எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்
ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்
ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்
ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்
ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"






