என் மலர்
வழிபாடு

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்தது
- வருகிற 19-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம்.
- 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்கான விழா நடந்து வருகிறது.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகர ஜோதி தரிசன தினத்தன்று கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த முன்பதிவு முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் 14-ந் தேதிக்கு மேல் தான் இனி கோவிலுக்கு செல்ல முடியும்.
அதே நேரம் சபரிமலை செல்லும் பக்தர்கள் மகரஜோதி அன்று பொன்னம்பல மேட்டிலும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
மகர ஜோதி தரிசனம் முடிந்து பின்னர் வருகிற 19-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். 20-ந் தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.
Next Story






