புத்திரகவுண்டன்பாளையம்கூத்தாண்டவர் கோவிலில் சாமி படுகளம்

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகியோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருநங்கைகள் நடனம் ஆடிய காட்சி.
திருநங்கைகள் நடனம் ஆடிய காட்சி.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகி யோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

மேலும் நேற்று கூத்தாண் டவர் சாமி படுகளம் செய் யும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

இதில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலை விரி கோலத்தில் நடனம் ஆடி னார்கள். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது.

பின்னர் குழந்தை வேண்டி நூற்றுக் கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து, ஆற்றங்க ரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேண்டுதலை வைத்தனர். இதில் குழந்தை இல்லாத வர்களுக்கு இந்த வேண்டு தல் வைத்தால் குழந்தை பிறக்கும் என ஐதீகம், இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com