என் மலர்
நீங்கள் தேடியது "Bangladeshi players shocked"
கிறிஸ்ட்சர்ச்:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குவதாக இருந்தது.
இந்த நிலையில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இந்த சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். தொழுகைக்காக திரண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக அந்த மசூதிக்கு சென்றனர். நல்ல வேளையாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வங்காளதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஓட்டலில் நலமாக உள்ளோம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான பயங்கரம் நிறைந்த அனுபவம் ஆகும். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NZMosqueAttack #tamimiqbal






