search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "insurgents"

    ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். #Afghan #NationalDefense #SF #Afghanelectionrally
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.

    இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.



    அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

    ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.  #Afghan #NationalDefense #SF 
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 162 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் 12 இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி மற்றும் தரைப்படை தாக்குதல்களில் ஒரே நாளில் 7 தலிபான் தளபதிகள் உட்பட 162 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 66 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒரு பயங்கரவாதியை கைது செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan
    ×