என் மலர்
நீங்கள் தேடியது "அகதிகள் பலி"
- கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
- படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர்.
மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.
தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவியில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என தெரியவில்லை.
- ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
- மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்தார்.
- துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் கண்டெய்னர் லாரி ஒன்று நுழைந்தது.
- அங்கிருந்து மீட்கப்பட்ட 34 அகதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோபியா:
ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த அந்த கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தனர். அப்போது, லாரி கண்டெயினரில் 52 பேர் அடைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில், 18 பேர் பிணமாக கிடந்தனர். குழந்தைகள் உள்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், கண்டெய்னரில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் என்றும், அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக 4 பேரை பல்கேரிய போலீசார் கைது செய்தனர்.
- ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு விபத்து.
- படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் மாயமாகினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர்.
இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்று துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
துனிசியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த 5-வது அகதிகள் படகு விபத்து இதுவாகும். இந்த விபத்துகளில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.
- பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
வாஷிங்டன்:
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமானியா நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்திய குடும்பத்தினர் உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. அந்தக் குழந்தையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
அமெரிக்காவுக்கு, மெக்சிகோ நாட்டு வழியாக பலர் அகதிகளாக செல்ல முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு மெக்சிகோவில் ஒரு பஸ்சில் வெனிசுலா, ஹைதி ஆகிய நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அகதிகள், அமெரிக்காவுக்கு சென்றனர். அப்போது ஒக்சாக்கா நெடுஞ்சாலையில் அந்த பஸ் விபத்தில் சிக்கியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் மூன்று சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது. அந்த வாகனங்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.






