ஜெய் ஸ்ரீராம், மோடி என முழக்கமிட்டவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி

அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.வருகிற 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஜெய் ஸ்ரீராம், மோடி என முழக்கமிட்டவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி
Published on

ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபாதை மேற்கொண்டு வருகிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜனதா தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி "அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும், இந்துஸ்தான் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com