search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gadhi"

    • ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.
    • எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது

    விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி, காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.

    அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்" என பதிவிடப்பட்டுள்ளது

    • விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
    • 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?

    விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்

    மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

    இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.

    சோனியா காந்தியின் தொகுதியாக இருந்த ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி யாத்திரை வரும் போது அதில் நான் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

    • பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன்.
    • நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பினார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்தேன். என் மீது 4 மந்திரிகள் குற்றம் சாட்டி இருப்பதாகவும், அவற்றுக்கு பதில் அளிக்க எனக்கு உரிமை இருப்பதாகவும் அவரிடம் கூறினேன்.

    எனவே, வெள்ளிக்கிழமை (இன்று) பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

    அங்கு பேச அனுமதி கிடைக்குமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு எம்.பி. என்ற முறையில், முதலில் பாராளுமன்றத்தில் பதில் சொல்வதுதான் எனது கடமை. அதன்பிறகு ஊடகங்களிடம் பேசுகிறேன்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், அதானி விவகாரம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, நேற்று பிற்பகலில் சபாநாயகர் ஓம்பிர்லாவை ராகுல்காந்தி சந்தித்தார். சபையில் பேச அனுமதி கோரினார். பாராளுமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    சபை ஒத்திவைப்புக்கு பிறகு வெளியே வந்த அவரிடம், 'மன்னிப்பு கேட்பீர்களா?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி புன்னகையையே பதிலாக தந்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    நான் நாட்டுக்கு எதிராகவோ, பாராளுமன்றத்துக்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன். அனுமதிக்காவிட்டால், வெளியே பேசுவேன். நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×