search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ragul gandhi"

    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.
    • ஜூன் 29, 30-ம் தேதிகளில் ராகுல் காந்தி அங்கு பயணம் மேற்கொள்கிறார்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. கடந்த 50 தினங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.

    கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் உள்ளது.

    மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா நேற்று எடுத்துரைத்தார்.

    இந்நிலையில், 2 நாள் பயணமாக ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜூன் 29, 30-ம் தேதிகளில் மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்கிறார். தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார். மணிப்பூர் ஏறக்குறைய 2 மாதமாக எரிந்து கொண்டிருக்கிறது. சமூகம் மோதலில் இருந்து அமைதிக்கு நகரும் வகையில் ஒரு குணப்படுத்தும் தொடுதல் தேவைப்படுகிறது. இது ஒரு மனிதாபிமான செயலுக்கானது. வெறுப்புக்கானது அல்ல, அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு என பதிவிட்டுள்ளார்.

    • பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, ராகுல் காந்தியின் தரப்பை நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

    இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் 'பாரத் ஜோடோ' யாத்திரையை கடந்த செப் டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30-ந் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    காஷ்மீரில் அவர் பேசும்போது 'இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார்.

    போலீசில் புகார் அளிக்கலாமே என கேட்டேன். அப்போது காவல் துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்' என தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது.

    பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள்.

    3 மணிநேரம் காத்திருந்து அவரிடம் இந்த நோட்டீசை கொடுத்தார்கள். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    இதன் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இந்த நோட்டீஸ் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று ராகுல்காந்தி வீட்டுக்குச் சென்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் ஒரு குழு அவரது வீட்டுக்குச் சென்றது.

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல்காந்தியிடம் போலீசார் கேட்டனர். ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்றதை அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு கூடினார்கள்.

    அவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

    போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என ராகுல் காந்தி கூறியதை அடுத்து, போலீசார் அவருக்கு அவகாசம் வழங்கியுள்ளனர்.

    இதுகுறித்து சிறப்பு சிபி ஹூடா கூறியதாவது:-

    நாங்கள் ராகுல் காந்தியை சந்தித்தோம். அவருக்கு சிறிது அவகாசம் தேவை என்றும், நாங்கள் கேட்ட தகவல்களைத் தருவதாகவும் அவர் கூறினார். நாங்கள் அளித்த நோட்டீசை அவரது அலுவலகம் ஏற்றுக் கொண்டது. விளக்கம் அளித்த பிறகு தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.

    இது ஒரு நீண்ட யாத்திரை என்றும் அவர் பலரைச் சந்தித்ததாகவும், அதைத் தொகுக்க நேரம் தேவை என்றும் ராகுல் காந்தி கூறினார். விரைவில் தகவலைத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் எங்கள் நடவடிக்கைகளைத் தொடங்குவோம்

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, ராகுல் காந்தியின் தரப்பை நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.
    • ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.

    அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடை பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை காஷ்மீர் போலீசார் மறுத்து இருந்தனர். பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தது.

    தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல்காந்தியின் பாத யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்தி போராவில் நேற்று மீண்டும் தொடங்கியது.

    ராகுல்காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அவரது மகள் இல்டிஜா முப்தி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராமானோர் பங்கேற்றனர். ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா லேத்போரா பகுதியில் நடைபயணத்தில் இணைந்தார்.

    நேற்று ராகுல்காந்தியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புல்வாமாவில் கடந்த 2019-ல் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 பேர் பலியான இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரை நோக்கி அவர் நடைபயணத்தை தொடர்ந்தார்.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்கின்றன.

    திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றன.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

    நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 3,970 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    • பஞ்சாப்பில் இன்று நடைபயணத்தின்போது ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.
    • நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.

    நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார்.
    • பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது.

    வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.

    நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

    இந்நிலையில், வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார். இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

    தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கடைசியாக குஜராத்தில் நடைபயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.

    இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.

    அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.

    • ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
    • தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.

    தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இதனிடையே ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது.

    ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.

    அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது.

    நிறைய தொகை கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை தங்களது அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் உற்சாகமாக திம்சா நடனமாடி மகிழ்ந்தார்.
    • பண்டிகையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி சாட்டையால் அடித்துக் கொண்டார்.

    தேச ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி கன்னியாகுமாரியில் நடைபயணத்தை தொடங்கினார். காஷ்மீர் வரை அவர் பாத யாத்திரையாக செல்கிறார். தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பயணத்தை முடித்த அவர் தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் சென்று வருகிறார்.

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட் டத்தில் நடைபயணத்தின்போது சில தொண்டர்கள் பஸ் கூரை மீது ஏறி நின்று ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதைப் பார்த்த ராகுல் காந்தி ஆர்வ மிகுதியில் பஸ் படிக்கட்டு வழியாக மேற்கூரைக்கு ஏறினார். அவர்களுடன் ராகுல் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    தொடர்ந்து இன்று ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க 'திம்சா' நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி பொனாலு பண்டிகையில் பங்கேற்றார். அங்கு, பண்டிகையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ×