என் மலர்
நீங்கள் தேடியது "நாட்டாமை"
- பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை.
- ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பிரமுகரான சரத்குமாரிடம், முந்தைய காலகட்டத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற சாதிய படங்கள் மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது சாதிக்கு எதிரான பைசன் போன்ற படங்கள் வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சரத்குமார், "நாட்டாமை படம் சாதிய படம் கிடையாது. அது ஒரு பஞ்சாயத்துத் தலைவர் கதை. அதே போல் தேவர் மகன் படம் அந்த பகுதியில் படம் எடுத்ததால் தேவர் மகன் என்று பெயர் வைத்தார்கள்.
பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை. ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள். அதனால் பழைய காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது, அது நடக்கக்கூடாது என்று படம் எடுப்பது தவறில்லை" என்று தெரிவித்தார்.
- பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
- துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
அதுசமயம் முதல் நாள் காலையில் பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் செடில் திருவிழா நடைபெற்றது.
இரண்டாவதுநாள் தேர்த்திருவிழா நடை பெற்றது.துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
விழாவில் துரும்பூர், பாதிரமேடு கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டாமைகள், கிராம வாசிகள் மற்றும்விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.






