என் மலர்

  நீங்கள் தேடியது "Addiction"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.

  சுவாமிமலை:

  சுவாமிமலை அருகே அசூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு
  போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  முகாமிற்கு கல்லூரி டீன் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார்.

  கல்லூரி முதல்வர் உஷா சேகர் முன்னிலை வகித்தார்.

  முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

  முகாமில் சிறப்பு விருந்தினராக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார்.

  இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.
  • போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் தாலுகா, நாலுவேதபதி ஊராட்சி சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

  விழாவில் வேதாரண்யம் டி.எஸ்.பி.

  முருகவேல், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

  இதில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சைக்கிள் ஓட்டி வந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
  • பரவை, பாப்பாகோயில் உள்ளிட்ட பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வரை போட்டி நடந்தது.

  நாகப்பட்டினம்:

  நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பாக போதை பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

  21 கிலோமீட்டர், 10.5 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  செருதூர் முதல் தெத்தி வரை 21 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் போட்டியை புத்தூரில் இருந்து பால்பண்ணைசேரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேம்ப் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சைக்கிள் ஓட்டி வந்து தொடங்கி வைத்தார்.

  வேளாங்கண்ணி, பரவை, பாப்பாகோயில் உள்ளிட்ட பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த போட்டியை, வழி நெடுகிலும் சாலையின் இருபுறம் நின்ற ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததனர்.

  மேலும் போட்டியில் பங்கு பெற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீண்டும் சாப்பிட தூண்டும் சாக்லெட்டும் போதைதான் என விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார்.

  சிவகாசி,

  சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம், பெண்கள் முன்னேற்ற அமைப்பு பகுதி -5, நுண்கலைகள் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து போதைப்பொருள் விழிப்பு ணர்வு கருத்தரங்கை நடத்தின.

  கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறிய தாவது:-

  போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களின் வகைகள், அவற்றின் தீமைகள், அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் அதுவும் போதைதான். நாம் சாப்பிடும் சாக்லேட் வகைகளை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுவதும் ஒரு வகை போதைதான்.

  போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தினால் சரிவர உணவு உண்ண முடியாது. மனச்சோர்வு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். பயம் ஏற்படும். உடல் மெலியும், குடல்புண், வாய்ப்புண் ஆகியவை உண்டாகும் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளியாக மாற்றும்.

  இவ்வாறு அவர் கூறி னார்.

  முன்னதாக இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் பாண்டிக்குமார். வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார். முடிவில் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் சிவகணேஷ் நன்றி கூறினார்.

  இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை தலைவர் அமுதா, பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபாதேவி. பகுதி-5 குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆகியோர் செய்திருத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண்கள் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது.
  • இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

  சென்னை:

  எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ... என்கிற பாடலை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் இளம்பெண்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

  கோயம்பேடு பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் சாலையில் சென்னை மாநகராட்சி சிக்னல் சந்திப்பில் ஒரு கருப்பு நிற காரில் 4 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் வந்து இறங்கினர். அனைவரும் புத்தாண்டு மது விருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை அவர்கள் அணிந்திருந்த ஆடை உணர்த்தியது.

  3 பெண்களும் கவர்ச்சியாக அரை குறை ஆடையை அணிந்திருந்தனர். 3 பேருமே போதையில் தள்ளாடிய நிலையில், ஒருவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இரவில் நடனம் ஆடிய கவர்ச்சி உடையிலே அந்த 3 பெண்களும் வந்திருந்தனர். 'வாந்தி' வருகிறது என ஒரு பெண் கூறியதாலேயே வாலிபர்கள் காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதையடுத்து போதை பெண் கீழே இறங்கினார்.

  அவர் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது. பின்னர் 4 இளைஞர்களும், 3 பெண்களையும் காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

  மது குடிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற நிலைமை மாறி இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். 'ஆணுக்கு பெண் சமம்' என்பது இது தானோ...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூ ரியில் பாதையை மாற்றும் போதை என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
  • மேலும் அரசால் தடை செய்யப்பட்ட, போதையை உருவாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

  நாமக்கல்:

  நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூ ரியில் பாதையை மாற்றும் போதை என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமை வகித்து பேசியதாவது,

  கொரோனா பரவல் காலத்தில் சிலர் தனிமை சூழலில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையை மாற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அனைத்து துறைகளும் சேர்ந்து காவல்துறை பங்க ளிப்புடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விண்ணை தொடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 177 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருட்களால் புற்றுநோய் ஏற்படுதல் உள்ளிட்ட தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்டப்பட்டன.

  இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ லர்கள் கொடுத்த தகவ லின் அடிப்படையில் 86 மாணவர்கள் போதை பொருட்கள் பழக்கத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

  மேலும் அரசால் தடை செய்யப்பட்ட, போதையை உருவாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தவறு செய்த 2 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய நம்பிக்கை ஊட்டல் காரணமாக பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் கூறி குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தினசரி தொலைபேசி அழைப்புகள் வரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

  முகாமில் பங்கேற்றுள்ள பேராசிரியர்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வை உணர்ந்து முயற்சி மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்ட வேண்டும். முகாமை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு விண்ணை தொடு வழிகாட்டுதல் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும். முதல் கட்டமாக கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரி வளாகத்தை போதை பொருட்கள் இல்லாத வளாகமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சாய்சரன் தேஜஸ்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சதீஷ், மாவட்ட சமூக நல அதிகாரி கீதா, கல்லூரி முதல்வர் குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடிபோதையில் வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முயன்றார்.
  • ஜோதி அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல்.

  திருவையாறு:

  திருவையாறு அருகே கல்யாணபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி ஜோதி (வயது 55).

  இதில் சீனிவாசன் இறந்து விட்டார்.

  ஜோதி தனது மகள்கள் வசந்தி (35), ரம்யா (30) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

  நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (25) என்பவர் குடிபோதையில் ஜோதி வீட்டிற்கு சென்று ரம்யாவிடம் தவறாக நடக்க முயன்றார்.

  இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஜோதி புகார் செய்ய இருப்பதாக கேள்விப்பட்ட சரவணன் மீண்டும் தகராறு செய்து ஜோதி அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விட்டார்.

  இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இது பற்றிய புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போதை பழக்கங்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

  நாகப்பட்டினம்:

  உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

  கலெக்டர் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் விபத்துக ளால் ஏற்படும் உயிரிழப்புகளை எவ்வாறு தவிர்ப்பது, விபத்து அவசர காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

  தொடர்ந்து உலக விபத்து காய தினம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை கலெக்டர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

  நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அருண் தம்பு ராஜ், போதை பழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மீண்டு வர ஆசிரியர்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும், பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன் பாட்டை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை.
  • கவியரசன் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சா பறிமுதல்.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

  அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  இந்தநிலையில் நேற்று காலை மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற மன்னார்குடியை சேர்ந்த கவியரசன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான்.

  குத்தாலம்:

  தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் சில மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்கள் சிலரும் அடிமையாகும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி வருவது வேதனையளிக்கிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே கஞ்சா அடிக்கும் சம்பவம்சமூக ஆர்வலர்களை பெரும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

  இது பற்றிய விவரம் வருமாறு:-

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக சமீப காலமாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ தற்போது வெளியாகி சக பெற்றோரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் என் மகனை, சக மாணவர்கள் கஞ்சா சாப்பிட்டு விட்டு தாக்கியுள்ளனர். இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான். 3 ஆண்டுகளாக இது நடக்கிறது. பள்ளிக்கு வெளியே ஒதுக்கபுறமான ஒரு இடத்தில் இந்த செயல்கள் அரங்கேறி வருகிறது என்று மாணவனின் தந்தை பேசுவது போலவும், அதற்கு தலைமை ஆசிரியர், போலீசில் பல தடவை புகார் கூறினோம். அவர்கள் 3 முறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் சென்று கஞ்சா குடிப்பவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று பதில் அளிப்பதாக அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

  இந்த வீடியோ மூலம் அந்த பள்ளியில் மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதாகவே அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

  இது குறித்து போலீசார் கூறும்போது:-

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். இருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தடுக்க அதிரடி சோதனை பணியில் ஈடுபட வேண்டும். அப்படி வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை கடந்த பிரச்சனை என்பதால் இவ்விவகாரத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

  கடலூர்:

  புவனகிரியில் சிதம்பரம் விருத்தாச்சலம் சாலையில் அமைந்துள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இதில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், பள்ளி தலைமை ஆசிரியர்ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.