

புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்ய ப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். காரைக்கால் இடும்பன்செட்டி சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெ க்டர் புருசோத்தமன் உத்தரவின் பேரில், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பெட்டி க்கடையை சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கடை உரிமையாளர் காத்த பெருமாளை(வயது68) கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.