search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்-ஜான் பாண்டியன்
    X

    ஜான் பாண்டியன்

    சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்-ஜான் பாண்டியன்

    • சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    மதுரை

    மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்

    தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×