search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puja"

    • நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் நிலையில், மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போதும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடத்தப்படும்.

    மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முடிந்து கடந்தமாதம் (ஜனவரி) 21-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திர கண்ட ரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ், கோவில்நடையை திறந்துவைத்து தீபம் ஏற்றுகிறார். பின்பு பதினெட்டாம் படியில் இறங்கி உள்முற்றத்தில் உள்ள ஹோமகுண்டத்தில் தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். நாளை(14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடத்தப்படும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். பின்பு அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.

    அதுமட்டுமின்றி நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களும் படிபூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்த மன பூஜை உள்ளிட் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த 5 நாட்களும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெறும்.

    மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகமும், 6.45 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படுகின்றன.

    மாசி மாத பூஜை வருகிற 18-ந்தேதி முடிகிறது. அன்றுஇரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக அடுத்தமாதம்(மார்ச்) 13-ந்தேதி மீண்டும் திறக்கப்படும்.

    • அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள புனித தூணிற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு பூஜைகள் செய்தார்.

    ராமேஸ்வரம்:

    மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    இந்நிலையில், இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.

    புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் அருகில் பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் ரூபா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள்,தி.மு.க. பொறுப்பாளர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1 ேகாடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படுகிறது.
    • கட்டிட பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) குமரேசன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா விநாயகமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீது மற்றும் கிராம பிரமுகர்கள் மணிகண்டன், மணிவண்ணன், கலியபெருமாள், குட்டியப்பன், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள் , ஆதரவாளர்கள் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா தியான மையம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு தியான மையம் அமைப்பதற்கான பணியின் துவக்க விழாவினை இன்று நடந்தது.

    ரூ.17.17 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிக்கான பூமி பூஜையை முத்தியால்பேட்டை தொகுதி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கி செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ஆரம்ப சுகாதாரம் டாக்டர்.முரளி, முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.அஸ்வினி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம் 1 செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள் , ஆதரவாளர்கள் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

    • சக்திமலை முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது.
    • சோம வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    இதில் சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விதமான அஷ்ட விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது பிரதோஷ விரதமாகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம், சோமவார பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் உயர்வான பலனை தரும்.

    இதையொட்டி சக்திமலை முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த சோம வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

    • பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .
    • பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக 14- வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .

    மாலை திருக்கல்யாண விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது . இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் மற்றும் சிவனுக்கும், அம்மனுக்கும் மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இங்கு பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊர்வலம்
    • 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    மதுரை மாநகரில் அ.தி.மு.க மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் செல்ல தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடக்க உள்ள அ.தி.மு.க மாநாடு வெற்றி பெறவும், அதிமுக ஆட்சி மலரவும் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்துவது என்று கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துனர்.

    இதற்காக அவர்கள் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் இருந்து மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

    நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் சண்முகம் ஏற்பாடு செய்து இருந்தார். அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

    குன்னூர்நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டி ராஜி, ஹேம்சந்த், தப்பகம்பை கிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டாக்டர் குருமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும், கிளை கழக செயலாளருமான நொண்டிமேடு கார்த்திக், வண்டிசோலை முன்னாள் ஊராட்சி தலைவர் சதிஷ்குமார், ஓ.சி.எஸ். தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய அ.தி.மு.க.வினரின் ஊர்வலம், ஊட்டி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    அதன்பிறகு மதுரை மாநாடு வெற்றி பெறவும், அ.தி.மு.க ஆட்சி அமைத்து கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகவும் வேண்டி, ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    • அடைக்கல அன்னை ஆலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

    அரியலூர்

    சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கல அன்னை ஆலாயத்தில் விளக்குப் பூஜை நடைபெற்றது.

    வீரமாமுனிவர் கட்டியதும், தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில்

    ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான ஆண்டுக்கான விளக்குப் பூஜை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

    குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி விளக்குப் பூஜையை தொடக்கி வைத்தார். விளக்குப் பூஜைக்கு பங்கு தந்தை தங்கசாமி, உதவி பங்கு தந்தை சுவைக்கின் ஆகியோர் சுதந்திர தின சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அன்னையை வழங்கினர்.

    படவிளக்கம்: ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின குத்துவிளக்குப் பூஜை

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலாயத்தில் நடைபெற்ற குத்துவிளக்குப் பூஜையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்திய குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி.

    • ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது
    • பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கரூர்,

    தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலபைரவருக்கு தொடர்ந்து பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரா தனை காட்டப்பட்டது.

    • செல்லியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலின் 6-ம் ஆண்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக செல்லிஅம்மனுக்கு பால், பன்னீர் , சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×