என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருவடி திருவிளக்கு பூஜை
    X

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருவடி திருவிளக்கு பூஜை

    • கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருவடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • அகத்தியர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், சித்தர்களின் 108 போற்றிகளை பாட மாணவிகள், விரலி மஞ்சளில் குங்குமத்தை இட்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்

    கரூர்:

    கரூர் வள்ளுவர் அறிவி–யல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தமிழ்த்துறை மன்றமும், அகத்தி–யர் சன் மார்க்க சங்கம் ஓங்காரக் குடில் (கரூர் கிளை) இணைந்து நடத்திய சித்தர்க–ளின் திரு–வடி திருவிளக்கு பூஜை புத்தாண்டில் புதுமை–யாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இரண்டா–மாண்டு மாணவிகள் அனை–வரும், தமிழ் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.

    மொத்தம் 200 மாணவிகள் கையில் அகல் விளக்கும், செவ்வந்தி பூக்களோடும், விரலி மஞ்சள், குங்குமத்தோடும் மங்களகரமாக அமர்ந்து பூஜையில் பங்கேற்றனர். அகத்தியர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள், சித்தர்களின் 108 போற்றிகளை பாட மாணவிகள், விரலி மஞ்சளில் குங்குமத்தை இட்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் வள்ளுவர் கல்லூரியின் செயலர் ஹேம–லதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.

    இணைச்செயலர் ராகவி நிகில்கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் இரு–ளப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் பாடிய திருப் பாவை பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜையின் நன்மைகள் குறித்தும், சித்தர்களின் பெருமை மற்றும் திருவிளக்கு வழி–பாடு நோக்கங்கள் குறித்தும் மாணவிகளோடு பகி–ரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

    Next Story
    ×