என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
செல்லப்பன்பேட்டையில், கால்நடை சிறப்பு முகாம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்
- தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது.
- மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை தாமதமின்றி வழங்க நடவடிக்கை.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்,டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான். தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்திற்குள்ளாக சீருடை உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக புத்தகப்பை வழங்குவதற்கான பணிகளை தொடங்கி ஜனவரி மாதத்திற்குள்ளாக வழங்கி விடுவோம். அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து 2 வாரத்திற்குள்ளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, புத்தகப்பை ஆகியவை தாமதம் இல்லாமல் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்லக்கண்ணு, கால்நடைபராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், தஞ்சாவூர் வருவாய்கோட்டாட்சியர் ரஞ்சித், உதவி இயக்குனர்சையத் அலி, பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






