search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sp"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
    • ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான் என்றார் அகிலேஷ்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது; டீசல், பெட்ரோல் அல்லது அடிப்படைத் தேவைகள் எல்லாம் இப்போது விலை உயர்ந்தவை.

    இந்த அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான்.

    உத்தர பிரதேசம் அவர்களை ஆட்சி அமைக்க வைத்தது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 2014-ல் ஆட்சிக்கு வந்தாலும் 2024-ல் வெளியேற்றப்படுவார்கள். உத்தர பிரதேச மக்கள் அன்புடன் வரவேற்பார்கள், அவர்கள் உற்சாகமாகவும் விடை அளிப்பார்கள்.

    அவர்கள் சீனா எங்கள் கிராமங்களின் பெயரை மாற்றியிருந்தால், சீனாவின் பெயரை மாற்றுவோம் என பா.ஜ.க. அரசு கூறுகிறது. சீனாவின் பெயரைத் திருத்தாதீர்கள், அவர்களுடன் வியாபாரத்தை நிறுத்துங்கள், அப்போதுதான் நம் தேசம் முன்னோக்கிப் பார்க்கப்படும் என தெரிவித்தார்.

    • சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர்.
    • எம்எல்சி-யாகவும் இருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவி என அனைத்தில் இருந்தும் விலகல்.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த 13-ந்தேதி தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது தனக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் உத்தர பிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உங்களுடன் பேசிய பிறகு, தேசிய பொதுச்செயலாளர் பதவியை 13-ந்தேதி ராஜினாமா செய்தேன். என்னுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்முயற்சி எடுக்கப்படாததால், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு கடிதத்தில் "நான் சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ராம்சரித்மனாஸ் மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், கட்சி சார்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தன.
    • சமாஜ்வாதி கட்சி ஆதரவில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். இவர் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த அமர் சிங் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தொடங்கினார். தற்போது அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிகள் வரும் மக்களவையில் இணைந்து போட்டியிடும் என கடந்த மாதம் 19-ந்தேதி அறிவித்தன.

    இந்த நிலையில் ஜெய்ந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-ஆர்எல்டி கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆர்எல்டி போட்டியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆர்எல்டி பாக்பாத், பிஜ்னோர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மாநிலங்களவை மற்றும் உ.பி. மேலவையில் தலா ஒரு இடம் பா.ஜனதா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாக்பாத் தொகுதியில் இரண்டு முறை பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் சத்ய பால் சிங் 2014-ல் அமர்சிங்கையும், 2019-ல் ஜெயந்த் சவுத்ரியையும் தோற்கடித்துள்ளார்.

    பிஜ்னோர் தொகுதியில் 2014-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் மத்திய மற்றும் மாநில மந்திரி சபையிலும் இடம் வகிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "அதுபற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. எது நடந்தாலும் அது பத்திரிகையில் செய்தியாக வந்துவிடும். எனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.

    • பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் இன்று நெல்லை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வரு கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் அங்கு வரவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த உறுதிமொழிக் குழுவினர், இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தின் போது, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அவ்வாறு விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு பரிந்துரைக்கப்படும் என சட்டமன்ற உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.

    • கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் புத்த மடாலயங்கள் இருந்தன
    • கோவில்களில் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?

    வாரணாசி மற்றும் மதுராவில் மசூதிக்குள் கோவில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கூறியதாவது:-

    உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்கள், புரியில் உள்ள ஜெகநாத் கோவில், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில், மகாராஷ்டிரா பந்தர்புரில் உள்ள விதோபா கோவில் ஆகியவற்றில் புத்த மடாலயங்கள் இருந்தன. இந்த புத்த மடாலயங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடங்களில் இந்து கோவில்கள் உருவாகின. அங்கு 8-ம் நூற்றாண்டு வரை புத்த மடாலயங்கள் இருந்தன.

    என்னுடைய நோக்கம் கோவில்கள் புத்த மடாலயங்கள் ஆக வேண்டும் என்பது அல்ல. ஆனால், நீங்கள் ஒவ்வொரு மசூதியாக கோவில்களை தேடினால், பின்னர் ஒவ்வொரு கோவில்களிலும் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?'' எனக் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் புபேந்திர சிங் சவுத்ரி, ''சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மீண்டும் மீண்டும் சனாதன தர்மம் அவமதிக்கப்பப்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் புனித தலமாக கேதர்நாத், பத்ரிநாத், ஜெகநாத் புரி விளங்குகிறது. இது சர்ச்சைக்குரிய கருத்து மட்டுமல்ல. இது அவரின் அற்பமான மனநிலை மற்றும் அரசியலையும காட்டுகிறது.

    இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்துகிறது. சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. மயூரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். சமாஜ்வாடி கட்சி இதை ஏற்றுக்கொண்டால், அதுகுறித்து அகிலேஷ் யாதவ் கருத்து விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

    • நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
    • நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 37 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    அதன்படி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 52 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல், 23 வழக்குகள் விசாரணையை முடித்தும், 59 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருந்த சுமார் 75 வழக்குகளை முடிக்க உதவியாக இருந்த கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி, தலைமை காவலர்கள் கந்தசாமி, சண்முகநாதன், முதல் நிலை காவலர்கள் அழகுமுத்து பாண்டியன், முத்துராஜ், செல்லப்பாண்டி, காவலர்கள் காளிராஜ் மற்றும் முருகேஷ்வரி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோடிலிங்கம், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அவினாசிபாளையம் பகுதியில் செல்வக்குமார் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார், செகமலையப்பன், சம்பத்குமார் ஆகியோரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாரை பதிவு செய்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

    • கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.
    • 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். இவா் நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்று, அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.

    கடந்த 2001ல் தமிழக காவல் துறையில் நேரடி துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியாற்றினாா். பின்னா் சென்னை அண்ணாநகா் உதவி ஆணையராகப் பணிபுரிந்து 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    இதையடுத்து 2012ல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்தாா். பின்னா் மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா், சென்னை போக்குவரத்து துணை ஆணையா், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, இதைத்தொடா்ந்து 2021 முதல் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தென்காசியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
    • கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தென்காசியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் எஸ்.பி. கூறும்போது, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், மேலும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது உதவி என்றால் தென்காசி மாவட்ட காவல்துறையின் 9498193455 மற்றும் 9385678039 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் சேர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியிட்டு பிரச்சினை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சமூக வலைதளங்களின் சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி, 3 பதிவுகளை அதில் இருந்து அகற்றுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

    டுவிட்டரில் ஏற்கனவே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பதிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்ப்பதற்காக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

    அதில் யாரும், யாரையும் தாக்கியது போன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை. 70 சதவீத அழைப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் தொடர்பு கொண்டு திருப்பூரில் இதுபோன்று நடக்கிறதா என்று விளக்கம் கேட்கின்றனர்.

    அவர்களுக்கு இந்தி தெரிந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தகவல்களை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவரிடம் எஸ்.பி. விசாரணை செய்தார்.
    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவரிடம் எஸ்.பி. விசாரணை செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ரவி. இவரிடம் புதன்சந்தையைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த திங்கள்கிழமை கைப்பேசியில் பேசினாா். அந்தப் பெண் பாலியல் ரீதியில் பேசியபோதும் அதைக் கேட்ட ரவி, காவலா் என்ற முறையில் அந்தப் பெண்ணைக் கண்டிக்காமல், அவருக்கு துணைபோகும் விதத்தில் பேசியுள்ளாா்.

    இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு காவலா் ரவியை அழைத்து நேரில் விசாரணை நடத்தினாா். இச்சம்பவம் தொடா்பாக எஸ்.பி.யிடம் கேட்டபோது, ஆடியோவில் பேசிய பெண் யாா்? அவா் எதற்காக பேசினாா்? தனிப்பிரிவு காவலருக்கும், அவருக்கும் தொடா்பு என்ன குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.  

    ×