search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா கூட்டணியில் இணையும் ராஷ்டிரிய லோக் தளம்
    X

    உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா கூட்டணியில் இணையும் ராஷ்டிரிய லோக் தளம்

    • சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தன.
    • சமாஜ்வாதி கட்சி ஆதரவில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். இவர் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த அமர் சிங் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தொடங்கினார். தற்போது அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிகள் வரும் மக்களவையில் இணைந்து போட்டியிடும் என கடந்த மாதம் 19-ந்தேதி அறிவித்தன.

    இந்த நிலையில் ஜெய்ந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-ஆர்எல்டி கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆர்எல்டி போட்டியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆர்எல்டி பாக்பாத், பிஜ்னோர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மாநிலங்களவை மற்றும் உ.பி. மேலவையில் தலா ஒரு இடம் பா.ஜனதா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாக்பாத் தொகுதியில் இரண்டு முறை பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் சத்ய பால் சிங் 2014-ல் அமர்சிங்கையும், 2019-ல் ஜெயந்த் சவுத்ரியையும் தோற்கடித்துள்ளார்.

    பிஜ்னோர் தொகுதியில் 2014-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் மத்திய மற்றும் மாநில மந்திரி சபையிலும் இடம் வகிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "அதுபற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. எது நடந்தாலும் அது பத்திரிகையில் செய்தியாக வந்துவிடும். எனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.

    Next Story
    ×