search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank accounts"

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்கவேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருமான வரித்துறையினரை வைத்து இப்படி செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. இப்படி செய்தால் தேர்தல் எப்படி நடக்கும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எப்படி பணம் சம்பாதித்தது என்பதை சுப்ரீம் கோர்ட்டு இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வங்கி கணக்குகள் செயல்பட்டில் உள்ளது.

    தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பா.ஜ.க.வின் வங்கி கணக்குகளை முடக்கவேண்டும்.

    தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி.
    • 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திடலில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    விபத்து காப்பீட்டு

    கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஸ் ராஜா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், மாவட்ட பொது செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன்,ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டாரிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-.

    ஒரு ரூபாயில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம் தந்தவர் பிரதமர் மோடி. சாதாரண பொதுமக்களும் வங்கி பழக்கத்தை பெற்றிட 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி. இன்று உலக நாடுகள் நம்மை வணங்குகின்றன.

    ஐ.நா.சபை

    193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையே நரேந்திர மோடியை உற்று பார்க்கிறது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் காஷ்மீரில் 370 என்ற தனிப்பிரிவை ரத்து செய்து இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. உலகத்திலேயே மிக பெரிய கேன்சர் செண்டர் அசாமில் வருகிறது.

    1999-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் 886 ஓட்டுவித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். நல்ல மனிதரை இழந்தோம். அதற்கு ஒருபரிகாரம் உண்டு என்றால் 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும்.கேரளாவில் ஆற்றிங்கல்பகுதியில் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் இந்த முறை தங்களின் வாக்கு நரேந்திரமோடிக்குதான் என்று.

    தமிழகத்தில் 2024 தேர்தலில் 25 பாராளுமன்ற தொகுதியை வெல்ல உள்ளோம். அதில் நம்பர் ஒன்றாக தென்காசி பாராளுமன்றம் இருக்க வேண்டும்.

    தூய்மையான, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் மலர வீடுதோறும் நமது திட்டத்தினை எடுத்து கூறி தாமரையை வெற்றிபெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கலாம்.
    • ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியிட்டு பிரச்சினை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சமூக வலைதளங்களின் சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி, 3 பதிவுகளை அதில் இருந்து அகற்றுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

    டுவிட்டரில் ஏற்கனவே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பதிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்ப்பதற்காக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

    அதில் யாரும், யாரையும் தாக்கியது போன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை. 70 சதவீத அழைப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் தொடர்பு கொண்டு திருப்பூரில் இதுபோன்று நடக்கிறதா என்று விளக்கம் கேட்கின்றனர்.

    அவர்களுக்கு இந்தி தெரிந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தகவல்களை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • பொங்கல் பரிசு தொகுப்பு பெற ‘ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 1,129 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலமாக 14 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 22 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,129 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்றும், இதற்காக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு வங்கி கணக்கு இணைக்கப்பட உள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு வங்கிக்கணக்கு இணைக்காமல் உள்ள கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டில் உள்ள யாராவது ஒருவரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் வேகமாக தகவல் பரவியது. அதுவும் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, பொங்கல் பரிசு தொகுப்பு பெற 'ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை. அது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்–றார். 

    • கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
    • புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக 65 வழக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 424 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 480 முடக்கப்பட்டுள்ளது. 

    • வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, புகையிலை மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டதில் வெள்ளகோவில் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் பகுதியில் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தேர்தல் காரணமாக வருமானவரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் நடக்கும் பணப் பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LSPolls #SatyabrataSahoo #IncomeTax
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது வாகனத்தில் கட்சி கொடியை பொருத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். கூட்டணி கட்சியின் கொடிகளையும் அனுமதி பெற்று வாகனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பொதுவாக வாகனங்களில் கொடிகள் உள்ளிட்ட இதர உபகரணங்களை பொருத்தும்போது மோட்டார் வாகன சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.

    சென்னையில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்கி கணக்கு மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் எடுத்துச்செல்வதற்கு பல்வேறு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் சான்றைப் பெற்றுச்செல்ல வேண்டும்.



    வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரும் வரவுகள் பற்றி வருமானவரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். ஆயிரக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் வங்கிக் கணக்குகளில் திடீரென்று ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் புரளத்தொடங்கினால் அதுவும் வருமான வரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    இந்த காலகட்டத்தில் பணப் பரிமாற்றத்தில் வித்தியாசங்கள் காணப்படும் வங்கிக் கணக்குகள், சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டு கண் காணிக்கப்படும்.

    திடீரென்று நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கிக்கணக்கில் திடீர் பண வரவு குறித்து கண்காணித்து அது குறித்த தகவல்களை வருமான வரித்துறை தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளன.

    தமிழகத்தில் இதுவரை தேர்தல் நடவடிக்கையில் ரூ.12 கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 19-ந் தேதியன்று மட்டும் ரூ.3 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 94 கிலோ கட்டித் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மதுரையைச் சேர்ந்த கிருபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 1.8 கிலோ வெள்ளி, மதுபான பாட்டில்கள் மற்றும் சிறிய பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றோடு கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 3,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரசு சொத்துக்களில் செய்யப்பட்டிருந்த 1.61 லட்சம் சுவர் விளம்பரங்களும், தனியார் சொத்துகளில் செய்யப்பட்டிருந்த 1.28 லட்சம் சுவர் விளம்பரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர் இடம்பெறும் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும் குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள், அந்தந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர் இல்லாத கூட்டம் என்றால், அரசியல் கட்சியின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

    வரும் 24-ந் தேதியன்று 3 லட்சத்து 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ள மற்ற அறைகளில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

    சி விஜில் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். இதில் பதிவாகும் புகார் பற்றிய விவரங்கள் மின்னணு முறையில் பதிவாகி இருக்கும். எனவே, பழைய பதிவுகளை இதில் பதிவேற்றம் செய்தால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.

    அந்த வகையில் இதுவரை 470 வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 154 புகார்கள் தேவையற்றவை என்று நீக்கப்பட்டுவிட்டன. 78 புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SatyabrataSahoo #IncomeTax
    ×