என் மலர்
நீங்கள் தேடியது "Pongal Gift"
- இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்திவைப்பு
- மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டா டும் வகையில் ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.
இதையடுத்து பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானிசாகர், அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி என மாவட்ட முழுவதும் உள்ள 172 கூட்டுறவு சங்கத்தின் கீழ் 878 முழு நேர ரேசன் கடைகள், 355 பகுதிநேர கடைகள் என 1,233 ரேசன் கடைகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தம் மாவட்ட முழுவதும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி நடந்து நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்க ப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த ரேஷன் கடைகளில் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை பொங்கல் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை.
- கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.500 ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம்.
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.
- நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.
2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.
நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.
கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
- இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
சென்னை:
தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பெருமைமிகு பண்டிகை பொங்கல் திருநாளாகும்.
இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும், ஏன் மனித குலத்திற்கே அடித் தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பெருமைமிகு விழா ஆகும்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரொக்க பணம் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.
அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்க அரசின் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.
மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தெரிகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது.
- வழக்கு வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
- வழக்கை பரிசீலிக்க அரசுக்கு போதிய அவகாசம் அளித்து முன்கூட்டியே மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
வருகிற பொங்கல் பண்டிகைக்கும் கடந்த ஆண்டை போல ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசு வெல்லத்தைச் சேர்க்க உத்தரவிடக்கோரி விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் கூறுகையில்,
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டை அணுகியிருக்கிறோம். கடந்த ஆண்டு இந்த கோரிக்கைக்காக நீதிமன்றத்தை நாடினோம். அப்போது வழக்கை பரிசீலிக்க அரசுக்கு போதிய அவகாசம் அளித்து முன்கூட்டியே மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி நாங்கள் தற்போது ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து வெல்லம் கொள்முதல் செய்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி, நடப்பாண்டில் விவசாயிகளின் பொங்கல் பண்டிகையை இனிமையாக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும் இடைத்தரகர்கள் பிரச்சனையை தவிர்க்க கொள்முதல் செய்யப்படும் வெல்லத்துக்கு உண்டான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
- பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ரூ.500 ஏற்கனவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
- சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.
சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! என கூறியுள்ளார்.
இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் #பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) January 10, 2024
சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! pic.twitter.com/vbkVS6GWRV
- பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்பட்டது.
- டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டன. ரொக்கப் பணம் வழங்கவில்லை.
அந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்களில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஆண்டு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறைப் பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாதோர் ஆகியோரைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை டி.யு.சி.எஸ். ரேசன் கடைக்கு நேரில் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
கடையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அடங்கிய பொருட்களை ஒரு பையில் போட்டு தயாராக வைத்திருந்தனர். அந்த பையுடன் கவரில் 1000 ரூபாய் பணம் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை வேலு எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. டோக்கன்களின் அடிப்படையில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்கள்.
வருகிற சனிக்கிழமைக்குள் (13-ந்தேதி) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க கூட்டுறவு-உணவுத்துறை தீர்மானித்துள்ளது. அதாவது இன்று தொடங்கி 4 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
- அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம். அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்ம்பத்தினர் பயனடைவர்.
- ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்படுகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்படு வருகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டு பொருள் இல்லா கார்டுகளை வைத்திருப்பவர்களை தவிர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பரிசை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டு பொருள் இல்லா கார்டுகளை வைத்திருப்பவர்களை தவிர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 7-ந்தேதி முதல் இன்று வரை தகுதியான அனைவருக்கும் டோக்கன் வழங்கி முடிக்கப்பட்டு உள்ளது. ரேசன் கடை ஊழியர்கள் இன்றும் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினார்கள்.
கடந்த 3 நாட்களாக வழங்கப்பட்ட டோக்கனில் எந்தெந்த தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் நாளை முதல் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக வருகிற 14-ந்தேதி வரை பொங்கல் தொகுப்பை ரேசன் கடைகளில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பை வழங்கும்போது பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2.24 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன.
இதில் 4 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என 24 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்காது. மற்ற அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதன்படி 1.86 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,067 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.239 கோடி கடந்த 4-ந்தேதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1828 கோடி ரூபாய் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை காலை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் அவர் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பரிசை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
இதன் பிறகு அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளது.