

தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது.
அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை, கரும்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
#WATCH | Chennai: Tamil Nadu CM MK Stalin inaugurates distribution of Rs 3,000 Pongal gift hamper scheme at a ration shop in Alandur, Chennai, today (January 9, 2026), marking the start of providing cash, rice, sugar, sugarcane, dhoti, and saree to over 2.22 crore Tamil Nadu… pic.twitter.com/SakrNMi12r