என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட அரசு.
    • தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு.

    பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்!

    உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட அரசு!

    பொங்கலோ பொங்கல்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×