என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரேஷன் கடைகளில் நாளையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்
- பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
- அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 பரிசுத்தொகை வழங்கும் பணி இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடைகளில் நாளையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு, பரிசுத்தொகை வழங்கும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் நாளையும் வழங்கப்படுகிறது.
இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3,000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.






