ஆதிதிராவிட பள்ளி மாணவர்கள் ஆதார் இணைப்புடன் வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு வசதி

வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கலாம். ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com