வெள்ளகோவிலில் கஞ்சா விற்ற 8 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, புகையிலை மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டதில் வெள்ளகோவில் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் பகுதியில் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com