search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்ட எஸ்.பி.
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசிய காட்சி

    தென்காசியில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்ட எஸ்.பி.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தென்காசியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
    • கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தென்காசியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் எஸ்.பி. கூறும்போது, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், மேலும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது உதவி என்றால் தென்காசி மாவட்ட காவல்துறையின் 9498193455 மற்றும் 9385678039 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் சேர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    Next Story
    ×