என் மலர்
இந்தியா

யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார் சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ.
- நீதியை பெற்று தந்ததற்காக முதல் மந்திரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பூஜா பால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜில் 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராஜு பால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூஜா பாலை திருமணம் செய்த சில நாட்களில் இந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் 2023-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை கூட்டத்தொடரின்போது சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார்.
இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறி பூஜா பாலை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு சென்ற பூஜா பால், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.






