ரக்ஷா பந்தன்: உ.பி.யில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்

ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
ரக்ஷா பந்தன்: உ.பி.யில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்
Published on: 

லக்னோ:

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை ஒட்டி உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com