என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல் மந்திரி: தொடர்ந்து முதலிடத்தில் யோகி ஆதித்யநாத்
    X

    இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல் மந்திரி: தொடர்ந்து முதலிடத்தில் யோகி ஆதித்யநாத்

    • நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
    • மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி 2வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல் மந்திரி யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.

    இதன்படி, 36 சதவீதம் பேர் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிறப்பாகச் செயல்படும் முதல் மந்திரியாக கருதுகின்றனர். உ.பி. முதல்வர் கடந்த பிப்ரவரியில் 35 சதவீத ஆதரவு பெற்று இருந்தார். தற்போது ஒரு சதவீதம் அதிகரித்து 36 சதவீதம் பெற்றுள்ளார்.

    2வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை 13 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

    அவரைத் தொடர்ந்து 7 சதவீதம் பேர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×